ராமநாதபுரம் கோட்டத்தில் ஓய்வு பெறும் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களின் வீடுகளுக்கே அதிகாரிகள் சென்று ஊழியர்களை பாராட்டி பணப்பலன் வழங்கினர்.
கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகம் காரைக்குடி மண்டலத்தில் 11 கிளைகள் உள்ளன.
இவற்றில் பணியாற்றிய நடத்துநர், ஓட்டுநர், டிக்கெட் பரிசோதகர் உள்ளிட்ட போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் 30-ல் ஓய்வு பெற்றுள்ளனர்.
ஊரடங்கு அமலில் உள்ளதால் ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடத்த முடியாத நிலை உள்ளது. அதனால் பல ஆண்டுகள் பணியாற்றிவிட்டு ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பாராட்டு விழாக்கூட நடத்தப்படவில்லை என்ற வருத்தத்தை போக்கவும், பணியாற்றும் ஊழியர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தவும், போக்குவரத்துக் கழக அதிகாரிகள், ஓய்வு பெறும் ஊழியர்களின் வீடுகளுக்கே சென்று, பாராட்டி பரிசுகளை வழங்கி வருகின்றனர்.
ராமநாதபுரம் கோட்டத்தில் உள்ள 6 கிளைகளில் பணியாற்றி மார்ச் 31-ல் ஓய்வு பெற்ற 7 ஊழியர்களுக்கு, அவர்களின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 30) ஓய்வு பெற்ற பரமக்குடி கிளை உதவி மேலாளர் இருளப்பன், ராமநாதபுரம் புறநகர் கிளை ஓட்டுநர்கள் சதாசிவம், ராஜேந்திரன், நகர் கிளை நடத்துநர் மனோகரன், ராமேசுவரம் கிளை நடத்துநர் பிச்சை, ஓட்டுநர் ரவி, டிக்கெட் பரிசோதகர்கள் பால்பாண்டி, ராமபாண்டி, ஆகியோர்களின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் ஊழியர்களுக்கு சந்தன மாலை அணிவித்து, முதற்கட்ட பணப்பலன் காசோலை மற்றும் பரிசுகளை வழங்கிப் பாராட்டினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago