சேலத்தில் ஊரடங்கை மீறியதாக 3,000 பேர் மீது வழக்குப்பதிவு; 2,800 வாகனங்கள் பறிமுதல்

By வி.சீனிவாசன்

சேலத்தில் கரோனா தொற்று பரவாமல் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில், விதி மீறிய 3,000 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, 2,800 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என, சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் தங்கதுரை தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கரோனா தொற்று பரவாமல் தடுத்திட கடந்த மார்ச் மாதம் முதல் 37 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. சேலத்தில் கடந்த 4 நாட்களாக முழு ஊரடங்கு அமலில் இருந்ததால் சேலம் மாநகரம் மற்றும் மாவட்ட பகுதிகளில் மக்கள் வீடுகளில் முடங்கி, வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

நேற்று முழு ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில், கரோனா தொற்றுப் பரவல் அச்சமின்றி வாகனங்களில் ஏராளமான பொதுமக்கள் சுற்றி வருவதைத் தடுக்கும் விதமாக மாநகர காவல் துறை சார்பில் சோதனை மேற்கொண்டு வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாநகர காவல் துறை துணை ஆணையாளர் தங்கதுரை இன்று (ஏப்.30) செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"சேலம் மாநகரில் முழு ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில், தேவையில்லாமல் சாலைகளில் சுற்றித் திரிபவர்களை கணடறிந்து இன்று மட்டும் 200 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சேலத்தில் கரோனா ஊரடங்கு காலத்தில் விதிகளை மீறிய 3,000 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, இதுவரை 2,800 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வெளி மாவட்டங்களில் இருந்து வரும் நபர்களை ஆங்காங்கே நிறுத்தி, அவர்களுக்குக் கரோனா தொற்று பரிசோதனை செய்து, நோய் பாதிப்பில்லாத நபர்கள் மட்டும் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.முழு ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே வெளியே வர வேண்டும்.

காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரை பொருட்கள் வாங்கிச் செல்ல தளர்வு உள்ளதால், தேவையில்லாமல் கூட்ட நெரிசலை ஏற்படுத்தக் கூடாது. தனிமனித இடைவெளியைக் கடைபிடித்து பொருட்களை பொதுமக்கள் வாங்கிச் செல்ல வேண்டும். ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களைத் தொடர்ந்து கண்காணித்து, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது"

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்