ஊரடங்கு நீட்டிப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசிக்க முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் வரும் மே 2-ம் தேதி அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் மே 3 -ம் தேதி வரை ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கரோனா தொற்று சரியாகாத நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கடந்த 27-ம் தேதி பிரதமர் ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் பல மாநில முதல்வர்கள் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தங்களது கருத்தைத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் அதிகமாக இருப்பதை அடுத்து, முக்கிய நகரங்களில் 4 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் அதைக் கண்டுகொள்ளாமல் வெளியில் நடமாடுவதைத் தடுக்கவே 3 மாநகராட்சிகள் உள்ளிட்ட முக்கிய மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் மத்திய அரசு அறிவித்த முழு ஊரடங்கு மே 3-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் அதன் அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை என்பது குறித்து ஆலோசிக்க முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடக்க உள்ளது. இந்தக் கூட்டத்தில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த, ஊரடங்கை நீட்டிப்பது அல்லது பகுதியாக நீட்டிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
» காவிரி மேலாண்மை ஆணையத்தை மீட்க அதிமுக, திமுக அழுத்தம் தர வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்
» கோவை அரசு சட்டக் கல்லூரியில் மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகள் தொடக்கம்
இதற்கு முன்னர் பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள், 19 நிபுணர்கள் குழு மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ள நிலையில் மே 2-ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டப்பட உள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago