திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரிலுள்ள நரிக்குறவர்கள் பலரும் தங்களது பச்சிளம் குழந்தைகளுக்கு பால்வாங்க பணமில்லாமல் பரிதவித்து வருகின்றனர்.
வள்ளியூர் பூங்கா நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் பாசி, ஊசி போன்றவற்றை தாங்களாகவே செய்து வள்ளியூர் பேருந்துநிலையத்தில் விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வந்தனர்.
ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டதில் இருந்து இவர்களது பிழைப்பு கேள்விக்குறியாகியது.
இந்நிலையில் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை அடுத்து இவர்களுக்கு அரசு தரப்பில் 5 கிலோ அரிசி, சீனி வழங்கப்பட்டது.
» கூடங்குளம் அணுமின் நிலைய கட்டுமான, பராமரிப்புப் பணிகள் தொடக்கம்
» வேட்டை நாயைப் பயன்படுத்தி மான் வேட்டை: 3 பேர் கைது; ரூ.1 லட்சம் அபராதம்
ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஐ.எஸ். இன்பதுரை, திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா உள்ளிட்டோரும் உதவிகளை செய்திருந்தனர்.
தற்போது இங்குள்ள பிச்சிளங்குழந்தைகளுக்கு பால் வாங்கி கொடுக்க முடியாமல் நரிக்குறவர் குடும்பத்தினர் அவதிப்படுகிறார்கள்.
கருப்புகாப்பியை பாட்டிலில் அடைத்து குழந்தைகளுக்கு ஊட்டிவருவதால் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகளுக்கு குழந்தைகள் ஆள்பட்டுள்ளனர்.
இது குறித்து நரிக்குறவர் காலனியை சேர்ந்த மோகன் கூறும்போது, வள்ளியூர் நரிக்குறவர் காலனியில் 110 குடும்பங்கள் வசித்து வருகிறோம். இந்த 110 குடும்பங்களில் 36 குடும்பங்களுக்குத்தான் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது.
எனவே இந்த 36 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் ரேசன் கடைகளில் உணவுப்பொருட்கள் வாங்க முடிகிறது. மற்றவர்கள் உணவுப்பொருட்களுக்கு கஷ்டப்பட்டுவருகிறோம். 54 பேருக்குத்தான் நலவாரிய அடையாள அட்டை இருக்கிறது. நலவாரிய அட்டை வைத்திருப்பவர்களது வங்கி கணக்கில் ரூ.2 ஆயிரம் செலுத்துவதாக அறிவித்திருந்தனர்.
ஆனால் இதுவரையிலும் எங்களது வங்கி கணக்கில் பணம் வரவில்லை. பச்சிளம் குழந்தைகளுக்கு பால்வாங்க காசு இல்லை. பால் இல்லாமல் சோறுவடித்த தண்ணீரையும், கருப்பு காப்பியையும் கொடுத்து வருகிறோம்.
இதனால் குழந்தைகளுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் எங்கள் பச்சிளம் குழந்தைகள் மீது பரிவு கொண்டு நிதிஉதவி வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago