கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்ற ஹரியானா மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.சி.குஹாத் தலைமையிலான குழுவின் பரிந்துரையை பல்கலைக்கழக மானியக்குழு ஏற்கக்கூடாது என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, ராமதாஸ் இன்று (ஏப்.29) தன் ட்விட்டர் பக்கத்தில், "தேசிய அளவில் இளநிலை மற்றும் முதுநிலை கலை - அறிவியல் படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்ற ஹரியானா மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.சி. குஹாத் தலைமையிலான குழுவின் பரிந்துரையை பல்கலைக்கழக மானியக்குழு ஏற்கக்கூடாது!
கரோனா பாதிப்பு சூழலில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்து பரிந்துரைக்க அமைக்கப்பட்ட குஹாத் குழு, பட்டப்படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும் என்று பரிந்துரை செய்திருப்பது அதிகார வரம்பு மீறிய செயலாகும். இது கண்டிக்கத்தக்கது!
கரோனா பாதிப்பால் பல மாநிலங்களிலும், சிபிஎஸ்இ பாடத்திட்ட பள்ளிகளிலும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்னும் நடத்தப்படவில்லை. இதனால் மாணவர்கள் மன உளைச்சலில் வாடும் நிலையில் எந்த நுழைவுத்தேர்வும் தேவையில்லை; நீட் தேர்வும் ரத்து செய்யப்பட வேண்டும்" என ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.
» கூடங்குளம் அணுமின் நிலைய கட்டுமான, பராமரிப்புப் பணிகள் தொடக்கம்
» வேட்டை நாயைப் பயன்படுத்தி மான் வேட்டை: 3 பேர் கைது; ரூ.1 லட்சம் அபராதம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
42 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago