கூடங்குளம் அணுமின் நிலைய கட்டுமான, பராமரிப்புப் பணிகள் தொடக்கம்

By அ.அருள்தாசன்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஊரடங்கு உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3, 4-வது அணு உலைகளுக்கான கட்டுமானப் பணிகள் பகுதிவாரியாக தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் மற்றும் 2-ம் அணு உலைகளில் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

3 மற்றும் 4-வது அணு உலைகளுக்கான கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன. இப்பணிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்தப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

கரோனா பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதை அடுத்து கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் அணுமின் நிலையத்தில் கட்டுமானப் பணிகள் முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

அதேநேரத்தில் முதல் மற்றும் 2-ம் அணு உலைகளுக்கான மின் உற்பத்தி பணிகளில் 30 சதவீத அணுமின் உற்பத்தி கழக ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று முதல் அணுமின் வளாகத்தில் இருந்த 2,500 வடமாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் பராமரிப்பு மற்றும் கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

கூடங்குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஒப்பந்த பணியாளர்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை முதலே அணுமின் நிலைய பணிக்கு சென்றனர்.

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு மே 3-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்டம் சிவப்பு மண்டல பகுதியில் இருக்கும் நிலையில் பணிகளை தொடங்கியிருப்பதற்கு அணுசக்திக்கு எதிரான அமைப்புகளை சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்