பிரதமர் அறிவித்த 2 காப்பீட்டுத் திட்டங்களுக்கான பிரீமியம் செலுத்துவதற்காக ‘சுரக்ஷா’ என்ற புதிய வைப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பொதுமக்கள் பிரீமியத்தை எளிதாக செலுத்த முடியும்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே 9-ம் தேதி ‘பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா’ என்ற விபத்துக்கான காப்பீட்டு திட்டத்தையும், ‘பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா’ என்ற ஆயுள் காப்பீட்டு திட்டத்தையும் தொடங்கி வைத்தார். பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தில் சேருபவர்கள் 18 முதல் 70 வயதுக்குள் இருக்க வேண்டும்.ரூ. 2 லட்சம் காப்பீடு கொண்ட இத்திட்டத்துக்கு ஆண்டொன்றுக்கு ரூ.12 பிரீமியமாக வசூலிக்கப்படும்.
அதேபோல், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தில் சேருபவர்கள் 18 முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் மட்டும் 50 வயது பூர்த்தி அடையாதவர் தன்னுடைய 50-வது வயதில் சேர்ந்தால் அடுத்த 5 வருடங்களுக்கு இந்தத் திட்டத்தில் இருக்கலாம். ரூ.2 லட்சம் காப்பீடு கொண்ட இத்திட்டத்துக்கு ஆண்டொன்றுக்கு ரூ.330 பிரீமிய மாக வசூலிக்கப்படும்.
இந்நிலையில், இந்த காப்பீட்டு திட்டங்களுக்கான பிரீமியம் தொகை செலுத்துவதற்காக ‘சுரக்ஷா வைப்புத் திட்டம்’ தொடங்கப் பட்டுள்ளது. இதன்படி, ஒரு குறிப்பிட்ட தொகையை வைப்புத் தொகையாக செலுத்தினால் அதில் இருந்து கிடைக்கும் வட்டியை வைத்து பிரீமியம் செலுத்தப்படும்.
இத்திட்டம் குறித்து, சென்னை யில் உள்ள மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஏ.அருண குமார் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
பிரதமர் தொடங்கி வைத்த காப்பீட்டு திட்டங்களுக்கு எளிமை யான முறையில் பிரீமியம் செலுத் துவதற்கு வசதியாக ‘சுரக்ஷா வைப்புத் திட்டம்’ தொடங்கப்பட்டுள் ளது. இதன்படி, ‘பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா’ என்ற விபத்துக்கான இன்ஷூரன்ஸ் பாலிசிக்கான பிரீமியம் ரூ.12-ஐ செலுத்த ரூ.201-ஐ வைப்புத் தொகை யாகவும், ‘பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா’ என்ற ஆயுள் காப்பீட்டு பாலிசிக்கான பிரீமியம் ரூ.330-ஐ செலுத்த ரூ.5,001-ஐயும் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும்.
அச்சம் தேவையில்லை
ஒருமுறை மேற்கண்ட வைப்புத் தொகையை செலுத்தி விட்டால், அவர்கள் பாலிசி எடுத்துள்ள காலம் முழுவதற்குமான பிரீமியத் தொகை இந்த வைப்பு நிதியில் இருந்து கிடைக்கும் வட்டி மூலம் எடுத்துக் கொள்ளப்படும்.
மேலும், ஆண்டுதோறும் சரியாக ஞாபகம் வைத்து பிரீமியம் செலுத்த வேண் டும் என்ற அவசியம் இல்லை. அத்துடன், பிரீமியம் செலுத்த வில்லை எனில் பாலிசி காலாவதி யாகும் என்ற அச்சமும் தேவை யில்லை.
இவ்வாறு அருண குமார் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago