4 போலீஸாருக்கு வைரஸ் தொற்று: சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையம் மூடல்

By செய்திப்பிரிவு

தமிழகத்திலேயே வைரஸ் தொற்றின் பாதிப்பு சென்னையில் அதிகமாக உள்ளது. இந்த வைரஸ் தொற்றால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், டாக்டர்கள், செவிலியர்கள், போலீஸார், பத்திரிகையாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறும் நோயாளிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலர், உளவுத் துறை காவலர் உட்பட 4 பேர்கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாதொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, இவர்களுக்கு தொற்று ஏற்பட்டிருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

சுகாதாரத் துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் வந்து கிருமிநாசினி தெளித்த பிறகு, காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட காவலர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த சக காவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரம் சென்னை எஸ்பிளனேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் எழும்பூர் ரயில்வே காவலருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE