கரோனா வைரஸ் பரவலால் உலகமே கடுமையான சூழலை எதிர்கொண்டிருக்கும் நிலையில், உயர்கல்வி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வருங்கால பட்டதாரிகள், பொறியியல் துறையில் உயர் கல்வியை எவ்வாறு தொடருவார்கள் என்பது குறித்து யாரிடமும் தெளிவில்லை. ஆனாலும், நம்பிக்கை, உறுதியுடன் இதை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இந்த ஊரடங்கு காலத்துக்குப் பின்னர் மீண்டெழப் போகும் தொழிற்சாலைகள் குறித்தும் வருங்கால பொறியாளர்கள் 2024-க்குள் தங்கள் வாழ்க்கையை எவ்வாறு திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என்பதையும் ஆராயும் வகையில் அமிர்தா விஷ்வ வித்யாபீடம், ‘இந்துதமிழ் திசை’ நாளிதழ் இணைந்து ‘webinar’ எனும் இணைய வழி உரையாடலை நடத்தவுள்ளன.
அமிர்தா விஷ்வ வித்யாபீடம் கல்வித் துறையில் 25 ஆண்டுகளாக முன்னணியில் உள்ளது. சமூகத்துக்கான பொறியாளர்களை உருவாக்குவதில் அமிர்தா ஸ்கூல் ஆஃப் இன்ஜினீயரிங் முன்னணியில் உள்ளது.
அமிர்தா விஷ்வ வித்யாபீடத்தின் வேந்தர் அம்மா கூறும்போது, “தைரியமாக இருங்கள், தைரியத்தை இழக்காதீர்கள். தைரியமேகரோனாவை அழிப்பதற்கான மருந்து ஆகும்” என்றார்.
அம்மாவின் செய்தியை மன தில்கொண்டு, எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையான கண்ணோட்டத்தோடு, அதற்கேற்ப திட்டமிட ‘வெப்பினார்’ (webinar)எனும் இணைய வழி உரையாடல்நடத்தப்படுகிறது. இது வருங்கால பொறியாளர்களுக்குத் தேவையான உள்ளடக்கத்தையும், தொற்று நோய்க்குப் பிறகு தொழில்நிலவரம், பொறியாளர்களுக்கு நிலவரம் எவ்வளவு உகந்ததாக இருக்கும், எதிர்கால வேலைவாய்ப்புகள் குறித்த வழிகாட்டு தலைக் கொண்டதாகவும் இருக்கும்.
நாளை (ஏப்.30) மாலை 5 முதல் 6 மணிவரை நடைபெறவுள்ள இந்த இணைய வழி உரையாடலில், அமிர்தா விஷ்வ வித்யாபீடத்தின் (பி.டெக்., சேர்க்கை) தலைவர் மகேஷ்வர சைதன்யா பங்கேற்று பேச உள்ளார். 15 ஆண்டுகளுக்கும் மேலாக கற்பித்தல் அனுபவம் பெற்றுள்ள இவர், உலகப் புகழ்பெற்ற ஒலிம்பிக்கின் போட்டித் தேர்வு - சர்வதேச கல்லூரி போட்டி் தேர்வின் (ஐசிபிசி) இயக்குநராக உள்ளார்.
இவரது சேவைக்காக 2018-ம்ஆண்டில் ‘ஆசியா டிஸ்டிங்விஷ்ட்லீடர்ஷிப்’ விருதைப் பெற்றுள்ளார்.இந்த உரையாடலில் பிளஸ்-1,பிளஸ்-2 மாணவ - மாணவியரும்,பெற்றோரும் கலந்து கொள்ளலாம். இதில் பங்கேற்க https://www.hindutamil.in/special/amritawebinar எனும் வலைப்பக்கத்தில் இணைந் திருங்கள்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago