கரூர் போக்குவரத்து எஸ்எஸ்ஐ வெளியிட்ட கரோனா விழிப்புணர்வு பாடல்

By க.ராதாகிருஷ்ணன்

கரூர் போக்குவரத்து எஸ்எஸ்ஐ ஒருவர் கரோனா குறித்து விழிப்புணர்வு பாடல் ஒன்றை பாடியுள்ளார். அப்பாடல் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

கரூர் நகர போக்குவரத்து காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் கன்னிகுமார். இவர் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் ஊரடங்கு காரணமாக வாகன சோதனை பணிகளை மேற்கொண்டு வருகிறார். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் ஏராளமான மக்கள் நாள்தோறும் வெளியில் சுற்றி வருவதை கண்டு வருகிறார்.

இதனால் மக்கள் கரோனா தொற்று ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்க ஊரடங்கை மதித்து வீட்டிலேயே இருக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், "கரோனா பத்தி பாடப்போறேன் குமாரு அது கேட்டு நீயும் ஆகிவிடு உஷாரு" என தொடங்கும் கரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்றை பாடி, அதன் வீடியோவை அண்மையில் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இது பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE