ஊரடங்கிலும் தொடரும் ‘கரோனா கொண்டாட்டம்’

By செய்திப்பிரிவு

கரோனா தொற்று முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கரோனா கொண்டாட்டம் என்ற பெயரில் இளைஞர்கள் பலர் சமூக விலகலை கடைபிடிக்காமல் அசைவ விருந்து நடத்தி வரு கின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே சென்னம்பட்டியில் வயல்காட்டு பகுதியில் இளைஞர்கள், சிறுவர்கள் என 20-க்கும் மேற்பட்டோர் தலைவாழை இலையில் அசைவ உணவை வைத்து, நெருக்கமாக அமர்ந்து சாப்பிடும் வீடியோ, புகைப்படம் கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

இதையடுத்து, வல்லம் போலீ ஸார் நேற்று சென்னம்பட்டிக்குச் சென்று, அசைவ விருந்துக்கு ஏற்பாடு செய்தவர், கலந்து கொண்டவர்கள் குறித்து விசா ரித்து வருகின்றனர்.

ஏற்கெனவே, தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே தியாக சமுத்திரத்திலும், கபிஸ் தலம் அருகே கொள்ளிடக் கரையிலும் சிலர் கறி விருந்து நடத்தி, அவர்களை போலீஸார் கைது செய்து, எச்சரித்து ஜாமீனில் விடுவித் துள்ளனர். ஆனாலும், கிராமப் புறங்களில் உள்ள இளைஞர்கள் இவ்வாறு பொறுப்பில்லாமல் நடந்துகொள்வது வேதனை யளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்