கரோனா பாதிப்பு: சிவகங்கை, ராமநாதபுரத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி, 87 வயது முதியவர் உட்பட 10 பேர் குணமடைந்தனர்

By இ.ஜெகநாதன்

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தைச் 4 வயது சிறுமி, 87 வயது முதியவர் உட்பட 10 பேர் இன்று ஒரே நாளில் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்

சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூரில் 9 பேர், இளையான்குடி, தேவகோட்டை, காரைக்குடியில் தலா ஒருவர் என 12 பேருக்கு கரோனா தொற்று இருந்தது.

இதுதவிர ராமநாதபுரம் மாவட்டத்தில் 15 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் ஏற்கெனவே சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர் என 8 பேர் குணமடைந்தனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இன்று சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 4 வயது சிறுமி, 87 வயது முதியவர் உட்பட 10 பேர் ஒரே குணமடைந்தனர்.

அவர்களை கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன், ஆட்சியர் ஜெயகாந்தன் ஆகியோர் பழங்கள், இனிப்பு, ஆடைகள் கொடுத்து வழியனுப்பி வைத்தனர். மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல், மருத்துவ இணை இயக்குநர் இளங்கோமகேஸ்வரன், நிலைய மருத்துவ அலுவலர்கள் மீனாள், முகமதுரபீக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இரு மாவட்டங்களிலும் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட 27 பேரில் 18 பேர் குணமடைந்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது உடல்நிலையும் சீராக உள்ளதால், விரைவில் குணமடைவர் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்