சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 6 நாட்களாக நேற்று வரை புதிதாக ஒருவர் கூட கரோனா தொற்று இல்லாதது ஆறுதல் அளிப்பதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். மேலும் இதுவரை 771 பேருக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே திருப்பத்தூரில் 9 பேர், இளையான்குடி, தேவகோட்டை, காரைக்குடியில் தலா ஒருவர் என 12 பேருக்கு கரோனா தொற்று இருந்தது. அதுதவிர ராமநாதபுரம் மாவட்டத்தில் 14 பேர் பாதிக்கப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் ஏற்கெனவே சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர் என 8 பேர் குணமடைந்தனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் 6 நாட்களாக புதிதாக ஒருவர் கூட கரோனா தொற்று இல்லை. மேலும் 6 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். இது ஆறுதல் அளிப்பதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
மேலும் சிகிச்சையில் உள்ள 6 பேரில் 5 பேர் இன்று குணமடைந்து வீட்டிற்கு சென்றனர். மேலும் சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 771 பேருக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
14 hours ago