கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 16 பேரில் 7 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கரோனா தொற்றால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 9 பேராகக்குறைந்துள்ளது. எனவே குமரி சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலமாக மாறவுள்ளது.
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா வார்டில் கரோனா தொற்று ஏற்பட்ட 16 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இதுவரை 1,668 பேருக்கு சளி, இருமல் அறிகுறியுடன் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கெனவே 3 பேர் குணமாகி வீடு திரும்பிய நிலையில் நாகர்கோவில் டென்னிசன்ரோடு, தேங்காய்பட்டணத்தைச் சேர்ந்தவர்கள் என இருவருக்கு பலகட்டப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது அவர்கள் கரோனா தொற்று நீங்கி குணமாகி இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால் இருவரும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி டீன் சுகந்தி ராஜகுமாரி தலைமையில் வீட்டிற்கு வழியனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் கைதட்டி ஆரவாரத்துடன் மருத்துவமனையில் இருந்து வழியனுப்பி வைத்தனர். குணமடைந்தவர்கள் இரு வாரம் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
இந்நிலையில் கரோனாவில் இருந்து குணமடைந்த வெள்ளடிச்சிவிளையைச் சேர்ந்த தந்தை, மகன் என இருவர், சிகிச்சை பெற்று வரும் உறவினர்களுக்காக வீட்டிற்குச் செல்லாமல் மருத்துவமனையிலே உள்ளனர். இதனால் குமரியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 16 பேரில் 7 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 9 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் கரோனா பாதிப்பில் சிவப்பு மண்டலத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டம் விரைவில் ஆரஞ்சு மண்டலமாக மாறவுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago