ஊரடங்கு உத்தரவால் நகைக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலை யில், அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஆன்லைனில் தங்கம் விற்பனை நேற்று தொடங்கியது.
அட்சய திருதியை தினத்தில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்பதும், வாழ்வு வளம் பெறும் என்பதும் மக்களிடம் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
இன்று அட்சய திருதியை
அந்த வகையில் ஒவ்வொருஆண்டும் அட்சய திருதியை நாளில்நகைக் கடைகளில் கூட்டம் அலைமோதும். ஆனால் இந்த ஆண்டுஊரடங்கு காரணமாக நகைக்கடைகள் மூடப்பட்டு இருப்பதால்,கடை உரிமையாளர்கள் ஆன்லைன் விற்பனையைத் தொடங்கி உள்ளனர்.
இதுதொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறும்போது, ‘‘தங்கத்தில் முதலீடு செய்வது தமிழக மக்களின் பாரம்பரியமாக உள்ளது.வழக்கமான பண்டிகை நாட்களைக் காட்டிலும், அட்சய திருதியை தினத்தில் பொதுமக்கள் நகை மற்றும் பொருட்களை வாங்கவிரும்புவார்கள். கரோனாவால் தற்போது ஊரடங்கு இருப்பதால்நகைக் கடைகளும் மூடப்பட்டுள் ளன. இருப்பினும், தமிழகம் முழுவதும் நகைக் கடை உரிமையாளர்கள் ஆன்லைன் மூலம் தங்க நாணயங்கள், நகை விற்பனையை நேற்று தொடங்கினர்.
பண பரிமாற்றத்தில் கவனம்
வாடிக்கையாளர்கள் நகை வாங்க பண பரிமாற்றத்தின்போது மிகக் கவனமுடன் செயல்பட வேண்டும்.சம்பந்தப்பட்ட நகைக் கடைகளின் இணையதளம் அல்லது நகைக் கடை உரிமையாளர்களின் எண்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெற்று, நகைகளை ஆன்லைனில் வாங்க லாம்.
கடந்த ஆண்டு அட்சய திருதியை தினத்தின்போது தமி ழகம் முழுவதும் சுமார் 5 ஆயிரம் கிலோவுக்கும் அதிகமாக தங்கம் விற்பனை ஆனது. ஆனால், இந்த ஆண்டு மூன்றில் ஒரு பங்கு கிடைத்தாலே பெரிய விஷயம்.
அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு ஆன்லைன் தங்கம் விற்பனை இன்றுவரை நடை பெறும். ஊரடங்கு முடிந்த பிறகு, மக்களின் தேவைக்கு ஏற்றவாறு நகைகளைத் தயாரித்து வழங்கவுள்ளோம். இவ்வாறு சாந்தகுமார் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago