மதுரையில் நாளை முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் பொருட்கள் வாங்க மக்கள் சித்திரைத் திருவிழா போல் சாலைகள், வீதிகளில் குவிந்ததால் மாவட்ட நிர்வாகம் அதிர்ச்சியடைந்தது.
‘கரோனா’ வேகமாகவும், அதிகமாகவும் பரவும் சென்னை, கோவை, சேலம், திருப்பூர் மாநகராட்சிகளுடன் சேர்ந்து மதுரை மாநகராட்சியிலும் நாளை 26-ம் தேதி முதல் 29ம் தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
இதில், அத்தியாவசியப் பணிகள் மேற்கொள்ள மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் வீட்டிற்கு அருகிலே காய்கறிகள், பழங்கள் பொதுமக்கள் வாங்குவதற்கு விதிமுறைகளுக்குட்பட்டு தற்காலிக காய்கறி கடைகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
கோழி, ஆட்டுக்கறி கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால், முழு ஊரடங்கில் பொருட்கள் எதுவும் கிடைக்காதோ என்ற பதற்றத்தில் மக்கள் இன்று காலை முதலே ஆயிரக்கணக்கில் குவிந்தனர்.
மதுரையில் உழவர்சந்தை முதல் மொத்தகாய்கறி சந்தை, சில்லறை கடைகள், இறைச்சி கடைகள் மற்றும் மளிகை கடைகளில் மக்கள் கூட்டம் குவிந்தனர்.
மதுரையில் பீபீ குளம் உழவர்சந்தையில் 2 கி.மீ., தொலைவிற்கு மக்கள் வரிசையில் நின்று காய்கறிகள் வாங்கிச் சென்றனர்.
மளிகை கடைகள், காய்கறி கடைகளில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பொருட்கள் குவிந்தனர். ம
துரையில் சித்திரை திருவிழா நடக்கும்போது ஒவ்வொரு வீதி, சாலைகளிலும் மக்கள் குவிவார்கள். அவர்களை போலீஸாரால் கட்டுப்படுத்த முடியாது. அப்படியொரு நிலைதான் நேற்று மதுரையில் ஏற்பட்டது.
போலீஸார் சமூகஇடைவெளியை கடைபிடிக்க மக்களை கேட்டுக் கொண்டனர்.
ஆனால், மக்கள் ஒருவரை இடித்துக் கொண்டு நெருக்கமாக நின்று கொண்டே பொருட்கள் வாங்கினர். முழுஊரடங்கில் கோழி மற்றும் ஆட்டு இறைச்சி கடைகள் திறக்காது என்பதால் இறைச்சி வாங்க அந்த கடைகளில் மக்கள் கூடினர். மதுரையின் அனைத்து சாலைகள், வீதிகளிலும் சித்திரை திருவிழா போல் மக்கள் குவிந்ததால் போலீஸார் அவர்களை ஒழுங்குப்படுத்த முடியாமல் சிரமப்பட்டனர்.
‘கரோனா’ பரவலைத் தடுக்கவே இந்த முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டநிலையில் மக்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் குவிந்ததால் மாவட்ட நிர்வாகம் அதிர்ச்சியடைந்தது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago