தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 3 பேர் இன்று (சனிக்கிழமை) குணமடைந்து வீடு திரும்பினர். இதையடுத்து தற்போது மாவட்டத்தில் 4 பேர் மட்டுமே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 27 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதில் 22 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலும், 5 பேர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றனர்.
அவர்களில் தூத்துக்குடியில் சிகிச்சை பெற்ற ஒரு மூதாட்டி மட்டும் இறந்துவிட்டார்.
மேலும், தூத்துக்குடியில் 16 பேரும், திருநெல்வேலியில் 3 பேரும் ஏற்கெனவே குணமடைந்து வீடு திரும்பினர். தூத்துக்குடியில் 5 பேர், திருநெல்வேலியில் 2 பேர் என மொத்தம் 7 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வந்தனர்.
» பிளாஸ்மா சிகிச்சைக்கு ரத்த தானம் அளிக்கத் தயார்: கரோனாவில் இருந்து மீண்ட விருதுநகர் இளைஞர்
இந்நிலையில் அவர்களில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போல்டன்புரத்தை சேர்ந்த 2 பேர், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அய்யனாரூத்தை சேர்ந்த ஒருவர் என மேலும் 3 பேர் இன்று (சனிக்கிழமை) குணமடைந்தனர்.
இதையடுத்து அவர்களை தூத்துக்குடி அரசு மருத்துவமனை டீன் திருவாசகமணி, திருநெல்வேலி அரசு மருத்துவமனை டீன் ரவிச்சந்திரன் ஆகியோர் பழங்களை கொடுத்து வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து தற்போது தூத்துக்குடியில் 3 பேரும், திருநெல்வேலியில் ஒருவரும் என மொத்தம் 4 பேர் மட்டுமே கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களும் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்கள் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago