2016 முதல் பிரத்யேக தடுப்பு வசதி இருந்தால்தான் வாகனங்களில் கால்நடை ஏற்ற உரிமம்: இறைச்சி விலை 2 மடங்காகும் என வியாபாரிகள் அச்சம்

By ச.கார்த்திகேயன்

பிரத்யேக தடுப்பு அமைப்புகளுடன் கூடிய வாகனங்களுக்கு மட்டுமே கால்நடை ஏற்றுவதற்கான உரிமம் வழங்கப்படும் என்று மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. 2016 ஜனவரியில் இது அமலுக்கு வரும்போது, இறைச்சி விலை 2 மடங்காக விலை உயரும் என்கின்றனர் வியாபாரிகள்.

இறைச்சிக்காக வாகனத்தில் ஏற்றிச் செல்லப்படும் கால்நடைகள் இடவசதி இன்றி சிரமப்படுகின்றன என்று விலங்குகள் நல அமைப்புகள் குரல் கொடுத்தன. இதன் விளைவாக, மோட்டார் வாகனச் சட்டம் 1988, மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989-ல் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் கடந்த மாதம் திருத்தம் கொண்டு வந்துள்ளது.

அதன்படி பசு, எருமை மாடு என்றால் 2 சதுர மீட்டர், குதிரைக்கு 2.25 சதுர மீட்டர், ஆட்டுக்கு 0.3 சதுர மீட்டர், பன்றிக்கு 0.6 சதுர மீட்டர், கோழிக்கு 40 சதுர சென்டிமீட்டர் என்ற அளவுக்கு ஒவ்வொரு விலங் குக்கும் தனித்தனியே இடம் இருக்கு மாறு நிரந்தர தடுப்பு ஏற்படுத்த வேண்டும். ஒரு தடுப்புக்குள் ஒரு கால்நடை மட்டுமே ஏற்றப்பட வேண்டும். கால்நடைக்கான உரிமம் பெற்ற வாகனங்களில் வேறு சரக்கு களை ஏற்றக்கூடாது. மேற்கூறிய வாறு தடுப்புகள் அமைக்கப்பட்ட தன் அடிப்படையில், வாகனங் களுக்கு இதற்கான சிறப்பு உரி மத்தை அந்தந்த வட்டார போக்கு வரத்து அலுவலர்கள் வழங்கலாம். இந்த சட்டத் திருத்தம் 2016 ஜனவரி 1-ம் தேதி அமலுக்கு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

‘‘இது எங்கள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. கால்நடைகள் பாதுகாப்புக்கான சக்தி வாய்ந்த ஆயுதம்’’ என்று விலங்குகள் நல அமைப்பான பிஎஃப்சிஐ நிறுவனர் அருண் பிரசன்னா கூறினார்.

ஆனால், இறைச்சி வியாபாரி கள் மத்தியில் இதற்கு அதிருப்தி நிலவுகிறது. தமிழ்நாடு அனைத்து இறைச்சி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்க மாநிலத் தலைவர் பி.ஷபீர் அகமதுகூறியதாவது:

சுமார் 800 கி.மீ. தொலைவில் மகாராஷ்டிராவில் இருந்து லாரியில் ஆடுகளை ஏற்றிவருகிறோம். ஒரு நடையில் 200 ஆடுகளை ஏற்ற முடியும். இதற்கு லாரி வாடகை ரூ.30 ஆயிரம் மற்றும் போலீஸாரை சரிக்கட்ட ரூ.5 ஆயிரம் செலவாகிறது. சட்டத் திருத்தத்தின் படி ஒரு லாரியில் 25 ஆடுகளை மட்டுமே ஏற்றமுடியும். இதனால், கிலோ ரூ.500-க்கு விற்கப்படும் ஆட்டிறைச்சி விலை ரூ.1,000 ஆகிவிடும். மாட்டிறைச்சி ரூ.220-ல் இருந்து ரூ.500 ஆகவும், கோழி இறைச்சி ரூ.120-ல் இருந்து ரூ.250 ஆகவும் உயரும்.

முக்கிய உணவான இறைச்சி விநியோகத்துக்காக, பிரத்யேக வடிவமைப்புகளுடன் கூடிய வாக னங்களை கட்டண அடிப்படையில் அரசே தொடங்கலாம். மகாராஷ்டிரா வில் இருந்து ஆடுகளை ரயிலில் கொண்டுவர ஏற்பாடு செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

‘‘இச்சட்டத் திருத்தம் தொடர்பாக அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி, கால்நடைகளை ஏற்றும் வாகனங்களுக்கு சிறப்பு உரிமம் வழங்க அறிவுறுத்த இருக்கிறோம்’’ என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்