இந்திய விமானநிலைய ஆணையக் குழுமத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் விமான நிலை யங்களுக்கு, அவை கையாளும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தர நிலை (கிரேடு) அளிக்கப் படுகிறது.
மூன்றாம் தர நிலையில் இருந்த திருச்சி விமானநிலையத்தின் மூலம் கடந்த 2019-20 ஆண்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சேவை என 14,483 விமான சேவை களின் வாயிலாக 16 லட்சத்து 11 ஆயிரத்து 859 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
ஒரே ஆண்டில் இங்கு வந்து சென்ற பயணிகளின் எண்ணிக்கை 15 லட்சத்தைத் தாண்டி யதைத் தொடர்ந்து திருச்சி விமானநிலையத்தை மூன்றாம் நிலையிலிருந்து, இரண்டாம் நிலைக்கு தரம் உயர்த்தி இந்திய விமானநிலைய ஆணையக் குழுமம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து விமானநிலைய இயக்குநர் குணசேகரனிடம் கேட்டபோது, “தரம் உயர்த்தப் பட்டுள்ளதால் விமானநிலைய நிர்வாக கட்டமைப்பு மேம்படுத் தப்படும். அதற்கேற்ப கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்படுவர்” என்றார்.
திருச்சி தொகுதி எம்.பி.யும், விமானநிலைய மேம்பாட்டு ஆலோ சனைக் குழுத் தலைவருமான சு.திருநாவுக்கரசர் கூறும்போது, “ஏற்கெனவே இங்கு ரூ.950 கோடி செலவில் புதிய முனையம் கட்டப்பட்டு வரும் நிலையில், இந்த தரம் உயர்வு திருச்சி விமான நிலைய வரலாற்றில் முக்கிய மைல் கல் ஆகும்.
நிர்வாக ரீதியில் திட்டங்கள் குறித்து முடிவெடுப்பதிலும், நிதி ஒப்புதல் பெறுவதிலும் தாமதம் தவிர்க்கப்படும். புதிய வளர்ச்சித் திட்டங்களையும், அதற்கான நிதியையும் எளிதில் கேட்டுப் பெற முடியும். இவற்றின்மூலம் திருச்சி விமானநிலையம் எதிர்காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும்” என்றார்.
தற்போதைய அறிவிப்பில் இந்தியாவிலேயே திருச்சி மட்டுமே மூன்றாம் நிலையிலிருந்து 2-ம் நிலைக்கு தரம் உயர்த்தப் பட்டுள்ள நிலையில், மேலும் 5 விமான நிலையங்கள் நான்காம் நிலையி லிருந்து மூன்றாம் நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதில், தமிழ்நாட்டிலுள்ள தூத்துக்குடி விமான நிலையமும் ஒன்று. மற்றவை கோரக்பூர், பிரக்யாராஜ் (உத்தரப் பிரதேசம்), ஹூப்ளி (கர்நாடகா), ஜபல்பூர் (மத்தியப் பிரதேசம்) விமானநிலையங்கள்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago