மரக்காணத்தில் கரோனா நிவாரண நிதி அதிகம் கொடுத்தது ரஜினியா? விஜய்யா என ரசிகர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவரது நண்பர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் சந்திகாப்பான் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் யுவராஜ் (22). கூலி தொழிலாளியான இவர் நடிகர் விஜய்யின் ரசிகர் என கூறப்படுகிறது இவரது வீட்டின் அருகில் வசிப்பவர் ஆறுமுகம் என்பவரின் மகன் தினேஷ்பாபு (22), நடிகர் ரஜினி ரசிகர் என கூறப்படுகிறது.
நண்பர்களான இவர்கள் இன்று (ஏப்.23) ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருந்துள்ளனர். இருவரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, கரோனா நிவாரண நிதியாக அரசுக்கு அதிகம் பணம் கொடுத்தது, ரஜினியா? விஜய்யா என்று அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த தினேஷ்பாபு, யுவராஜை கையால் பலமாகத் தாக்கிக் கீழே தள்ளிவிட்டுள்ளார். இதில், தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்த யுவராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளார்.
இத்தகவல் அறிந்த மரக்காணம் போலீஸார், யுவராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கனகசெட்டிக்குளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து தினேஷ்பாபுவை கைது செய்து மேற்கொண்டு விசாரனை நடத்தி வருகின்றனர். ஊரடங்கு சமயத்தில் அவர்களுக்கு மதுபானம் கிடைத்தது எப்படி என்றும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago