பத்து நாட்களாக புதிதாக கரோனா தொற்றில்லை; இரண்டாம் நிலையிலிருந்து மீண்டும் முதல்நிலைக்கு சென்ற புதுச்சேரி

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரியில் கடந்த பத்து நாட்களாக புதிதாக யாருக்கும் கரோனா தொற்றில்லை. வைரஸ் தொற்றுடன் வெளிமாநிலத்திலிருந்து வந்த 3 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். ஏற்கெனவே வெளிமாநிலத்திலிருந்து வந்த 3 பேர் குணமடைந்துள்ளனர். அவர்களிடமிருந்து மக்களுக்குப் பரவாததால் இரண்டாம் நிலையிலிருந்து முதல் நிலைக்கு மாறியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் நான்கு பிராந்தியங்களாக புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளன. அதில் கரோனா தொற்றினால் புதுச்சேரியில் 7 பேரும், மாஹே பிராந்தியத்தில் 2 பேரும் பாதிக்கப்பட்டனர். இதில் மாஹே பிராந்தியத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து, மாஹே பிராந்தியத்தில் ஒருவரும், புதுச்சேரியில் நால்வரும் சிகிச்சையில் நலம் பெற்று வீடு திரும்பினர். தற்போது தொற்று உறுதியான 3 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில், புதுச்சேரியில் கரோனா தொற்று நிலவரம் தொடர்பாக சுகாதாரத்துறை செயலர் பிரசாந்த் குமார் பாண்டா, சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் மோகன்குமாரிடம் கேட்டதற்கு, "புதுச்சேரியில் கடந்த பத்து நாட்களாக கரோனா தொற்று யாருக்கும் புதிதாக வரவில்லை. சிகிச்சையில் இருந்தோரும் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

ஒரு வாரத்துக்கும் மேலாக தொற்றுடைய மூவர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். அவர்களின் உடல் நலத்தில் முன்னேற்றம் உள்ளது. வெளிமாநிலத்தில் இருந்து வந்த புதுச்சேரியை சார்ந்தோருக்கு மட்டுமே தொற்று இருந்தது. அதிலும் பலரும் குணமடைந்தனர். வெளியூரில் இருந்து வந்தோரிடம் இருந்து புதுச்சேரியில் உள்ளோருக்கு பரவவில்லை. அதனால் இரண்டாம் நிலையிலிருந்து மீண்டும் முதல் நிலைக்கு சென்றுள்ளோம்.

வீடு வீடாக சென்று 9 லட்சத்து 91 ஆயிரம் பேரிடம் சர்வே செய்துள்ளோம். நாளை இது நிறைவடையும். தற்போது தொற்று அறிகுறி இல்லாமல் யாருக்கேனும் கரோனா வைரஸ் இருக்கிறதா என்பதை ஆராய ஆரம்ப சுகாதார நிலையங்களில் சர்வே பரிசோதனை தொடங்கியுள்ளோம்" என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

மேலும்