மது அருந்துவோர் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது. அதனால் சமூகத்தில் இன்று விவாகரத்து, தற்கொலை, கொலை சம்பவங்கள் அதிகரிப்பதாக மனநல மருத்துவ ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
முன்பெல்லாம் போதிய விழிப் புணர்வு இல்லாததால், சங்கிலியால் பிணைக்கப்பட்டவர்கள், தனிமைப் படுத்தப்பட்டவர்கள்தான் மன நோயாளிகள் என சமூகத்தில் நினைக்கப்பட்டது. 'நிரூபிக்கப் படாத, உண்மையில் நிகழ்ந்திராத ஒரு விஷயத்தை, அது உண்மை யில் நடக்கிறது என்ற அசைக்க முடியாத எண்ணம் கொண்டிருப் பவர்கள்கூட' மனநோயாளிகள் தான் என மருத்துவ ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதற்கு 'டெலூசன்' (Delusion) அல்லது 'மனப்பிறழ்வு' என்று மனநல மருத்துவத்தில் சொல்லப் படுகிறது. இந்நோய் உள்ளவர்கள், மற்றவர்களுடன் நெருக்கமாக பழகுவர். இவர்களை மேலோட் டமாக பார்த்தால் வேறு எந்த மாற் றங்களும் தெரியாது. அதனால் அவர்களுக்கு மனநோய் இருப்பதை நம்புவதற்கே கடினமாகி விடும்.
வெளியே தெரியாமல் ஏற்படும் இந்த மனநோயால், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை, தற்கொலை போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக மருத்துவ ஆராய்ச்சியில் நிரூபிக் கப்பட்டுள்ளது. சராசரியாக 3 சதவீதம் பேரை பாதிக்கும் இந்த மனநோய், குடிப்பழக்கம் உள்ளவர்களிடையே 30% வரை காணப்படுவதாக மனநல மருத்துவ ஆராய்ச்சியில் நிரூபண மானதாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியரும் மனநல சிறப்பு மருத்துவரு மான ஆ.காட்சன் தெரிவிக்கிறார்.
இதுகுறித்து அவர் 'தி இந்து' விடம் கூறியதாவது: இது மனச் சிதைவு நோயின் அங்கமாகவோ அல்லது ஏதேனும் ஒரு குறிப் பிட்ட நிகழ்வை மட்டும் மைய மாக கொண்ட தனிப்பட்ட மனநோயாகவோ கருதப்படுகிறது. தங்கள் வாழ்க்கைத் துணை தவறான தொடர்பு வைத்திருப்பதாகவும், தனக்கு துரோகம் செய்வதாகவும் அதீத எண்ணத்தை ஏற்படுத்தும் சந்தேக மனநோயாகும். இது இருபாலினருக்கும் ஏற்படலாம்.
ஆண்கள் பாதிக்கப்பட்டால் ஏற்படும் விளைவுகளும், பெண் கள் பாதிக்கப்பட்டால் ஏற்படும் விளைவுகளும் சற்று வித்தியாசப் படுகின்றன. இந்நோயால் பாதிக் கப்படும் ஆண்கள், மனைவி தொழில்ரீதியாக அல்லது அன்றாட வாழ்க்கை சம்பவங்களில்கூட ஆண்களிடம் பேசுவதை சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்ப்பதுடன், அவர்கள் எந்த ஆண்களுடனும் பேசக்கூடாது, வீட்டை விட்டே வெளியே செல்லக்கூடாது என்றும் கட்டாயப்படுத்துவர்.
இதனால் அடிக்கடி கணவன் மனைவி இடையே பிரச்சினை ஏற்படுவது, அடிப்பது, வெளியில் சொல்லி அவமானப்படுத்துவது, விவாகரத்து கோருவது, இல்லற வாழ்க்கையில் பாதிப்புகள் போன் றவை ஏற்படுகின்றன. உச்சகட்டமாக கொலை செய்யும் அளவுக்கு ஆக்ரோஷமான செயல்களில்கூட ஈடுபடுவர்.
பெண்களுக்கு இந்த சந்தேக நோய் ஏற்பட்டால் கணவரின் செல் போன் எண்கள், குறுஞ்செய்திகளை அடிக்கடி உளவுபார்ப்பது, பெண் களிடம் சாதாரணமாக பேசினால்கூட அவர்களுடன் கணவனுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறுவது, வேலைக்கு சென்று வீடு திரும்ப தாமதமானால் அடிக்கடி போன் செய்து எங்கு இருக்கிறார் என்பதை உறுதி செய்வது போன்றவை நடக்கும்.
கணவன் பழக்கம் வைத்திருப் பதாக சந்தேகப்படும் பெண்களுடன் சண்டையில் ஈடுபடுவர். சில பெண்கள் கணவரைப் பற்றி தீர விசாரிக்காமலே போலீஸிடம் புகார் செய்வது, தனியாகவோ அல்லது குழந்தைகளுடனோ தற்கொலை செய்துகொள்வது போன்ற விபரீத முடிவுகளையும் எடுப்பர்.
தங்கள் வாழ்க்கைத் துணை உண்மையிலேயே தவறான தொடர்பு வைத்திருப்பதாக எண் ணம் ஏற்படுத்தும் இந்த சந்தேக மனநோயை, எத்தனை ஆதாரங் களுடன் நிரூபித்தாலும் மாற்றமுடியாது. கணவன், மனைவி இடையே ஏற்படும் இந்த மனநோயே தற்போது நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம்.
விழிப்புணர்வு இல்லாததும், பாதிக்கப்பட்டவர்கள் சிகிச் சைக்கு வர மறுப்பதும்தான் பிரச் சினைகள் முற்றிப்போக காரணம். ஆரம்பத்தில் இவர்கள் கூறுவது உண்மையே என்று நம்பும் அள வுக்கு ஜோடனைகள் இருக்கும். நாளடைவில் வாழ்க்கை துணையின் நடத்தைகளைக் குறித்து அவர்கள் கூறும் சாத்தியமற்ற காரணங்கள், சம்பந்தமே இல்லாத விளக்கங்கள் மற்றும் செயல்கள் மூலமாக மனநோயின் அறிகுறிதான் என்று தெளிவாகக் கண்டுகொள்ளலாம்.
இதை சாதாரணமாக ஆலோச னைகள் அல்லது கவுன்சலிங் மூலமாக மாற்றவே முடியாது. மாத்திரைகள் உட்கொள்வது மூலம் மட்டுமே மாற்றத்தை காணமுடியும். ஆரம்ப அறிகுறி கள் தெரியும்போதே சிகிச்சை செய்துகொண்டால் நல்லபலன் கிடைக்கும். இவ்வகை மனநோய் மது அருந்துவோருக்கு அதிகம் ஏற்படுகிறது. அதனால், இளை ஞர்கள் ஆரம்பத்திலே குடிப் பழக்கத்துக்கு அடிமையாகாமல் தடுப்பது பெற்றோர் மற்றும் இந்த சமுதாயத்தின் கடமை என்று அவர் தெரிவித்தார்.
மதுப் பழக்கம், மது போதை, மதுவிலக்கு, மது பிரச்சினை, மனநலம், மனநோய்
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago