கரோனா தொற்றில் தமிழகம் இந்திய அளவில் ஐந்து இடங்களுக்குள் உள்ள நிலையில் தமிழகத்தில் சென்னை முதலிடத்தில் உள்ளது. மிக அதிக அளவிலான கரோனா நோயாளிகள் சென்னையில் குறிப்பிட்ட 3 மண்டலங்களில் உள்ளனர். இதற்காக சென்னைக்கு என மேலும் 2 ஐஏஎஸ் அதிகாரிகளை முதல்வர் பழனிசாமி நியமித்துள்ளார்.
தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. நேற்று 76 பேருக்கு தமிழகம் முழுவதும் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அதிகபட்சமாக 55 தொற்றுகள் சென்னையில் கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் 303 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை நேற்று 358 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் குறிப்பிட்ட 3 மண்டலங்களில் நோய்த்தொற்று அதிகரித்துள்ளது. அதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது.
இந்நிலையில் சென்னையை சிறப்பு கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ள முதல்வர் பழனிசாமி சென்னையின் கரோனா தடுப்புப் பணிக்காக கூடுதலாக 2 ஐஏஎஸ் அதிகாரிகளை மண்டல அலுவலர்களாக நியமித்துள்ளார்.
இதில் கார்த்திகேயன் தற்போது சிஎம்டிஏ அதிகாரியாக இருக்கிறார். அவர் ஏற்கெனவே 2 முறை சென்னை மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்ட அறிவிப்பு:
“தற்போது நிலவிவரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, சென்னை மாநகரத்தில் நோய்த் தடுப்புப் பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தை முற்றிலும் கட்டுப்படுத்தவும், நோய்த் தொற்று ஏற்பட்டவர்களின் தொடர்புகளை உடனுக்குடன் கண்டறிந்து சோதனைக்கு உள்ளாக்கவும், மாநகரப் பகுதிகளில் மூச்சிறைப்பு, காய்ச்சல், தொண்டை வலி போன்ற அறிகுறி உள்ளவர்களை உடனுக்குடன் கரோனோ தொற்று பரிசோதனை செய்யவும், இதன் மூலம் சென்னை மாநகரில் தற்போது செய்யப்பட்டு வரும் பரிசோதனைகளை கணிசமாக உயர்த்தவும், அந்தப் பரிசோதனை முடிவுகள் உடனுக்குடன் பெற்று நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளேன்.
இதற்காக கார்த்திகேயன் மற்றும் பாஸ்கரன் ஆகிய இரண்டு உயர் அலுவலர்கள் சென்னை மாநகரத்திற்கு கூடுதலாக மண்டல அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்”.
இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago