கரோனா அச்சத்தால் புதுச்சேரி பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் திருத்தேர் உற்சவத் திருவிழா ரத்தாகியுள்ளது. இன்று தொடங்கி வரும் மே 6 வரை நடைபெறவிருந்த அனைத்து திருத்தேர் உற்சவ நிகழ்வுகளும் ரத்தாகியுள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி பிள்ளையார்குப்பம் கிராமத்தில் விழுப்புரம் மாவட்டம் கூவாகத்தைப் போல் ஆண்டுதோறும் கூத்தாண்டவர் கோயில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்நிகழ்வில் திருத்தேரோட்டம், திருநங்கையர் தாலி கட்டும் நிகழ்ச்சி, அரவான் களப்பலி உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளில் நாடு முழுவதும் இருந்து திருநங்கையர் பங்கேற்பது வழக்கம்.
ஆண்டுதோறும் இத்திருக்கோயிலில் திருத்தேர் உற்சவத் திருவிழா சித்திரை மாதத்தில் பவுர்ணமி தினத்தில் நடப்பது வழக்கம். நடப்பாண்டு கரோனா தொற்று வைரஸ் பரவலால் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் கோயில் திருவிழாக்கள் நடத்துவது தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்து அறநிலையத்துறை சுற்றறிக்கையும் கோயில் நிர்வாகத்துக்கு வந்துள்ளது.
» ஏப்ரல் 26 மற்றும் மே 3 ஆகிய இரு தேதிகளில் சென்னையில் முழு அடைப்பு அவசியம்; வாசன்
» விழுப்புரம் நகரில் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே கடைகள் திறக்கப்படும்; வணிகர் சங்கம் அறிவிப்பு
இதனால் ஏப்ரல் 22 முதல் மே 6-ம் தேதி வரை நடைபெற இருந்த 2020-ம் ஆண்டு திருத்தேர் உற்சவ விழா நிகழ்ச்சிகள் நடைபெறாது. பக்தர்கள், பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தந்து வீட்டில் இருந்தபடியே அருள்மிகு கூத்தாண்டவர் சுவாமியின் மெய் அருளைப் பெற வணங்குமாறு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
35 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago