மே 3 வரை திருச்சி, திருவாரூர் மக்களுக்கு இலவச உணவு- அம்மா உணவகங்களுக்கான செலவை அதிமுக ஏற்றுக்கொண்டது

By செய்திப்பிரிவு

திருச்சி மாநகரில் புத்தூர், தென்னூர் உழவர் சந்தை, உறையூர் சாலை ரோடு, ஜங்ஷன் ராக்கின்ஸ் ரோடு, கல்கண்டார்கோட்டை, அரியமங்கலம் ஜெகநாதபுரம் ஆகிய 6 இடங்களில் உள்ள அம்மா உணவகங்களில் மே 3-ம் தேதி வரை மக்களுக்கு இலவசமாக உணவு வழங்க ஆகும் செலவை அதிமுக மாநகர் மாவட்டம் ஏற்றுக்கொண்டுள்ளது.

இதையொட்டி, முதல் கட்டமாக ரூ.2 லட்சத்துக்கான காசோ லையை மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியனிடம் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் ப.குமார் நேற்று முன்தினம் அளித்தார்.

இதேபோல, திருச்சி மாநகரில் உள்ள அம்மா உணவகங் களில் உணவருந்தும் ஆதர வற்ற, வீடற்ற ஏழை, எளிய மக்களுக்கு உதவும் விதமாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசுவிடம் 300 மூட்டை அரிசியை சுற்றுலாத் துறை அமைச்சர் என்.நடராஜன் நேற்று வழங்கினார்.

திருவாரூர் மாவட்டம் குடவாசலில் அதிமுக மாவட்டச் செயலாளரும், உணவுத் துறை அமைச்சருமான ஆர்.காமராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாத ரேஷன் பொருட்களை விலையில்லா மல் வழங்குவதற்கான தேதியை முதல்வர் விரைவில் அறிவிப்பார்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூர், திருவாரூர் மருத்து வக் கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் இயங்கும் 5 அம்மா உணவகங்களில் பொதுமக்கள் உண்ணும் உண வுக்கு திருவாரூர் மாவட்ட அதிமுக சார்பில் கட்டணம் செலுத்தப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்