ஊரடங்கை மதிக்காவிட்டால் சென்னை இன்னொரு நியூயார்க்காக மாறிவிடும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக, ராமதாஸ் இன்று (ஏப்.21) தன் ட்விட்டர் பக்கத்தில், "சென்னை அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு இரு சக்கர வாகனங்களும், கார்களும் விரைகின்றன. சென்னை என்ன கரோனா காலத்து சுற்றுலாத்தலமா? ஊரடங்கை மதிக்காவிட்டால் சென்னை இன்னொரு நியூயார்க்காக மாறிவிடும்... எச்சரிக்கை!
தமிழகத்தின் 23 ஹாட்ஸ்பாட் மாவட்டங்களில் சென்னை தான் முதலிடம். 10 மாவட்டங்களின் மொத்த பாதிப்பை விட அதிகமாக சென்னையில் 303 பேர் பாதிப்பு. அதன்பிறகும் பொறுப்பின்றி மக்கள் ஊர் சுற்றினால், அதை காவல்துறை அனுமதித்தால் கரோனாவிடமிருந்து சென்னையை யாராலும் காப்பாற்ற முடியாது!
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் போல வாகனங்கள் அணிவகுப்பதை காவல்துறையால் கட்டுப்படுத்த முடியாதா? அதிக கட்டமைப்பு கொண்ட போக்குவரத்து காவல்துறையால் அனைத்து சாலைகளிலும் சோதனைச்சாவடிகளை அமைக்க முடியாதா? அதையும் மீறும் அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்ய முடியாதா?
சென்னையில் ஊரடங்கை மீறிய போக்குவரத்தை கட்டுப்படுத்த காவல்துறை தவறியது கண்டிக்கத்தக்கது. ஊரடங்கை செயல்படுத்தியதில் சபாஷ் வாங்கிய சென்னை காவல்துறைக்கு திடீர் சோர்வு, சுணக்கம் ஏன்? ஒருவேளை ஊரடங்கை தளர்த்த காவல்துறைக்கு ரகசிய ஆணை வந்திருக்கிறதா?" என பதிவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago