ரேஷன் கடைகள் மூலம் ரூ.500க்கு 19 வகை மளிகைப் பொருட்கள்: இன்று முதல் விற்பனை தொடக்கம்

By செய்திப்பிரிவு

ஊரடங்கில் வீட்டில் முடங்கியுள்ள பொதுமக்களுக்கு உதவ ரூ.500 விலையில் 19 வகை மளிகைப் பொருட்கள் கொண்ட தொகுப்பை ரேஷன் கடைகள், கூட்டுறவு சங்கக் கடைகள் மூலம் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது.

கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் தவிர அனைத்தும் மூடப்பட்டன. பொதுமக்கள் வீட்டில் முடங்கும் நிலை ஏற்பட்டது. அத்தியாவசியப் பொருட்களும் பல பகுதிகளில் கிடைக்காத நிலை ஏற்பட்டது. ஊரடங்கைப் பயன்படுத்தி மளிகைப் பொருட்கள், காய்கறிகளின் விலை உயர்த்தி விற்கப்படுகிறது.

இதையடுத்து பொதுமக்களுக்கு வசதியாக ரூ.500 விலையில் 19 வகையான வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் விற்பனைக்குக் கொண்டுவரப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்திருந்தார்.

டி.யு.சி.எஸ் நிறுவனத்தின் மூலம் மளிகைப் பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு இணைப்பில் கண்டவாறு மாவட்ட வாரியாக ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. இதற்கான விற்பனையை இன்று அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். தமிழகத்தில் உள்ள 23,486 நியாய விலைக்கடைகள், கூட்டுறவு அங்காடிகள், அம்மா கூட்டுறவு அங்காடிகள், நகர பசுமை அங்காடிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் விற்பனைக்கு வர உள்ளது.

597 ரூபாய் மதிப்புள்ள 19 வகையான மளிகைப் பொருட்களை ரேஷன் அட்டை இல்லாதவர்களும் நியாய விலைக்கடைகளில் ரூ.500 கொடுத்து வாங்கிக்கொள்ளலாம் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

19 வகை பொருட்களின் விலைப் பட்டியல்

விவரம் அளவு விலை வெளிசந்தை விலை
துவரம்பருப்பு 1/2கிலோ 57.50 65
உளுந்தம்பருப்பு 1/2 கிலோ 64.70 75
கடலைப்பருப்பு 1/4 கிலோ 22 27
மிளகு 100 கிராம் 42.70 50
சீரகம் 100 கிராம் 25.60 30
கடுகு 100 கிராம் 9 12
வெந்தயம் 100 கிராம் 8.60 11
தோசை புளி 250 கிராம் 35.50 42
பொட்டுக் கடலை 250 கிராம் 22 25
நீட்டு மிளகாய் 150 கிராம் 25.50 30
தனியா 200 கிராம் 24 30
மஞ்சள் தூள் 100 கிராம் 12.90 16
டீ தூள் 100 கிராம் 24 28
உப்பு 1 கிலோ 8 10
பூண்டு 250 கிராம் 50 70
சன்பிளவர் ஆயில்200 கிராம் 25 29
பட்டை 10 கிராம் 3 5
சோம்பு 50 கிராம் 6.50 10
மிளகாய்த்தூள் 100 கிராம் 25 32
மொத்தம் 491.50 597

இதைத் தவிர பொருட்கள் போடுவதற்கான பை ரூ.3.60, வேலை செய்யும் ஊழியர்களுக்கு கூலி ரூ.4.90 என மொத்தம் ரு.500க்கு விற்பனை செய்யப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்