சிவகங்கையில் அமைச்சர் நிகழ்ச்சியில் குவிந்த ஊராட்சித் தலைவர்கள்: கேள்விக்குறியாகும் சமூக இடைவெளி- அமைச்சர் பாஸ்கரன் கவனம் கொள்வாரா?

By இ.ஜெகநாதன்

சிவகங்கையில் கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத் துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் பங்கேற்ற நிகழ்ச்சியில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் ஊராட்சித் தலைவர்கள் குவிந்ததால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.

ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் அமைச்சர் பாஸ்கரன் பங்கேற்கும் நிகழ்ச்சியில் தொடர்ந்து சமூக இடைவெளியை கடைபிடிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

சிலதினங்களுக்கு முன் காரைக்குடியில் அமைச்சர் பங்கேற்ற நிவாரணப் பொருட்கள் வழங்கும் விழாவில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என புகார் எழுந்தது. அதேபோல் மற்றொரு சம்பவம் இன்று சிவகங்கையில் நடந்தேறியது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சித்த மருத்துவத்துறை சார்பில் கிராமமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்குவதற்காக ஊராட்சித் தலைவர்களிடம் கபசுரக் குடிநீர் பொடி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் பாஸ்கரன், ஆட்சியர் ஜெயகாந்தன் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியை முறையாக ஏற்பாடு செய்யவில்லை. இதனால் 100-க்கும் மேற்பட்ட ஊராட்சித் தலைவர்கள் நிகழ்ச்சி நடந்த வளாகத்தில் குவிந்தனர். அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் அமைச்சர் நிகழ்ச்சியில் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்று பரவக்கூடாது என்பதற்காக தான் சமூக இடைவெளியை கடைபிடிக்க அரசு வலியுறுத்தி வருகிறது. இதனை சிவகங்கை மாவட்ட அதிகாரிகள் எப்போது தான் உணர்வார்களோ என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்