கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் வாகனங்களை தடுத்து நிறுத்தி போலீஸார் வழக்குப்பதிவு செய்வதாகக் கூறி, அரசு ஊழியர்கள்கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் வரை 6 பேர் கரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
ஆகவே, கட்டுப்பாட்டு வளையத்துக்குள் வந்துள்ள கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் தடுப்புகள்அமைக்கப்பட்டு, போலீஸார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பகுதிகளில் வருவாய்த் துறை அலுவலர்கள், ஊழியர்கள், வட்ட வழங்கல் மற்றும்பேரூராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் ஆகியோர் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக இவர்கள் செல்லும் வாகனங்களை கும்மிடிப்பூண்டி போலீஸார் தடுத்து நிறுத்தி, வழக்குப் பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட 40-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் நேற்று கும்மிடிப்பூண்டிவட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, போலீஸார் தங்கள் மீது வழக்குப் போடுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி, வட்டாட்சியர் குமாரிடம் புகார் மனு அளித்தனர்.
இதையடுத்து, கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ரமேஷ் நேரில் சென்று, அரசு ஊழியர்களை சமாதானப்படுத்தினார். அப்போது, அவர் அரசு ஊழியர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற்று, வாகனங்களை விடுவிப்பதாக உறுதியளித்தார். ஆகவே அரசு ஊழியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
34 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago