ஊரடங்கு உத்தரவால் கிராமத்து சிறுவர்கள் இணைய விளையாட்டில் மூழ்கி அடிமையாகி வருகின்றனர்.
கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நகரம் மட்டுமின்றி கிராமங்களும் முடங்கியுள்ளன.
'வீட்டில் இரு; விலகி இரு' என்று அரசு கூறி வருவதால் பலர் சேர்ந்து விளையாடும் உடல் ஆரோக்கிய விளையாட்டுகளைத் தவிர்த்து இணைய விளையாட்டுகளில் கிராமத்துச் சிறுவர்கள் மூழ்கியுள்ளனர்.
சிவகங்கை அருகே பாசங்கரை கிராமத்தில் ஊரடங்கு அமலுக்கு வந்ததும் ஊர்க் கூட்டத்தைக் கூட்டி பல்வேறு கட்டுப்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் விதித்தனர்.
இதனால் வெளியூர்களுக்கு கூலி வேலைக்குச் சென்றவர்கள், வேலையின்றி மரத்தடி, மந்தைகளில் பொழுதைக் கழித்து வருகின்றனர். நிலம் உள்ளவர்கள் மட்டும் விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவர்களோ 'பப்ஜி', 'ஃப்ரீ ஃபயர்' போன்ற இணைய விளையாட்டுகளில் மூழ்கியுள்ளனர். இதேபோல் தமிழகம் முழுவதும் கிராமங்களில் சிறுவர்கள் இணையத்தில் விளையாடி வருகின்றனர்.
இந்த விளையாட்டுகள் சிறுவர்களை நிரந்தரமாக அடிமையாக்கி வருகின்றன. பொழுதுபோக்குவதற்காக விளையாட ஆரம்பித்தவர்கள், தற்போது அதில் இருந்து வெளியே வர முடியாமல் திணறுகின்றனர். கிராஃபிக்ஸ் காட்சிகளால் ஈர்க்கப்பட்டு அதிலேயே மூழ்கியுள்ளனர். அந்த அளவுக்கு இணைய விளையாட்டுகள் அவர்களைத் தன்வசப்படுத்திக் கொண்டது.
தனித்தனியாக வெவ்வேறு இடங்களில் இருந்து மொபைலில் குழுவாக விளையாடுகின்றனர். எந்நேரமும் இணையத்தில் விளையாடுவதால் செயற்கை உலகத்திற்கே சென்று விடுகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்களும் கவலை தெரிவித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago