மதுரை அரசரடியில் உள்ள தனியார் கல்லூரியில் மணிப்பூர், சிக்கிம், திரிபுரா மாநிலங்களைச் சேர்ந்த 10 மாணவிகள் மற்றும் 14 மாணவர்கள் படிக்கின்றனர்.
ஊரடங்கால் சிரமப்படும் இவர்கள், மணிப்பூர் மாநில உயர் நீதிமன்ற சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்த தகவலை சென்னை உயர் நீதிமன்ற சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு மணிப்பூர் சட்டப் பணிகள் ஆணைக்குழு தெரிவித்தது.
உரிய நடவடிக்கை எடுக்கும்படி, மதுரை மாவட்ட முதன்மை நீதிபதி நசீமா பானுவை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது.
அவரது உத்தரவின்பேரில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலரும், சார்பு நீதிபதியுமான வி.தீபா, செஞ்சிலுவைச் சங்கச் செயலாளர் கோபாலகிருஷ்ணன். வழக்கறிஞர் முத்துக்குமார், தியாகராஜர் பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் வடகிழக்கு மாநில மாணவ, மாணவிகளுக்குத் தேவையான அரிசி, பருப்பு, காய்கறிகள், மளிகைப் பொருட்கள், முகக் கவசம் மற்றும் கிருமி நாசினி ஆகியவற்றை நேற்று வழங்கினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
25 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago