தமிழகத்தில் நோய்த்தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையைவிட குணமாகி டிஸ்சார்ஜ் ஆகிறவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இன்று 49 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் மொத்த எண்ணிக்கை 1372 ஆக உயர்ந்துள்ளது. டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 82 ஆக அதிகரித்துள்ளது.
அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
“210 நாடுகளுக்கு மேல் 22 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் தீவிர தடுப்பு தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேவையான அனைத்து தடுப்பு, கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
தமிழகத்தில் 2, 3 நாட்களில் ஒவ்வொரு நாளும் பாஸிட்டிவ் கேஸ் எண்ணிக்கையும், டிஸ்சார்ஜ் ஆகிறவர்கள் எண்ணிக்கையும் கணக்கிட்டால் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகமாகவும், பாசிட்டிவ் ஆகிறவர்கள் எண்ணிக்கை குறைவாகவும் உள்ளது ஆரோக்கியமான ஒன்று.
» மீன்பிடி தடைக்காலத்தை அமல்படுத்திவிட்டு பன்னாட்டு கப்பல்களை கடலில் அனுமதிக்கலாமா?-கமல் கேள்வி
» புதுச்சேரியில் சீல் வைக்கப்பட்ட குடோனை உடைத்து மதுபாட்டில்கள் திருட்டு
இதுவரை எடுக்கப்பட்ட மொத்த சாம்பிள் எண்ணிக்கை 5360 பேர், மொத்த ஆய்வுகள் 35036, ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்ட நபர்கள் 29997 பேர். இன்று கரோனா தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 49 பேர், மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1372 பேர். 4 பேர் சற்று நோயுற்ற நிலையில் உள்ளனர்.
நேற்றும், இன்றும் மரணம் இல்லை.இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 82, மொத்தம் இதுவரை 365 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்கள். டிஸ்சார்ஜ் செய்தவர்கள் நமது சிகிச்சைமுறை, செவிலியர்கள், மருத்துவர்களின் கவனிப்புக்கு நெகிழ்ச்சியடைந்து நன்றி தெரிவித்து செல்கின்றனர்.
தமிழகத்தில் இன்றும் கூடுதலாக 3 ஆய்வகங்களுக்கு ஒப்புதல் வாங்கியுள்ளோம். தற்போதுள்ள மொத்த ஆய்வகங்கள் எண்ணிக்கை 31 (அரசு21+தனியார் 10). ஒரு ஆய்வகத்தில் மட்டும் ஒரே நேரத்தில் 1000 எண்ணிக்கை ஆய்வு செய்யக்கூடிய நிலைக்கு வந்துள்ளோம்.
அதிகமான ஆய்வகம் உள்ள மாநிலம் தமிழகம் தான். அதிகமாக குணமடைபவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. உயர்தர சிகிச்சை மூலம் மரண விகிதத்ததை 1.1% ஆக குறைத்துள்ளோம்.
ஆரம்பத்தில் 1000 சாம்பிள் எடுத்தோம். தற்போது ஒரே நாளில் 5333 சோதனை நடத்தும் அளவுக்கு முன்னேறியுள்ளோம். விழிப்புணர்வு, தடுப்பு நடவடிக்கை, கண்காணிப்பு, தொடர் கண்காணிப்பு, கண்காணிப்பு திட்டம். இவைகளை குறிக்கோளாக வைத்து செயல்படுகிறோம்.
ரேபிட் கிட் ஆய்வு தொடங்கி விட்டது. இன்று அனைத்து கிட்-களையும் இன்று காலையிலேயே பல மாவட்டங்களுக்கும் அனுப்பிவிட்டோம். ஆனால் ஒன்றை சொல்லி விடுகிறேன். ரேபிட் கிட் சோதனை ஒரு இண்டிகேட்டர் மட்டுமே. ஆனால் பிசிஆர் சோதனை மட்டுமே முழுமையான ஆய்வாகும்.
ஐசிஎம் ஆர் வழிகாட்டுதல்படி யார் யாருக்கு எடுக்கச் சொல்லியிருக்கிறார்களோ அதன்படி செய்கிறோம். சரி(SARI) டெஸ்ட், சாதாரண சளி ஜுரம் வந்தாலும் சோதனை, 7 நாட்கள் கழித்து மீண்டும் சோதனை, தேவைப்பட்டால் முன்னணியில் செயல்படுபவர்கள் என அனைத்து சோதனைகளும் ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல்படி எடுக்கிறோம்.
நமக்கு வருகின்ற பாசிட்டிவ் கேஸ் ஏற்கெனவே பாசிட்டிவ் உள்ளவர்களுடன் தொடர்பு உள்ளவர்களிடம் தான் பாசிட்டிவ் வருகிறது. அடுத்து யாருக்கு சளி, காய்ச்சல் இருந்தாலும் உடனடியாக ஆய்வு செய்கிறோம்.
அடுத்து தீவிர சுவாசத்தொற்றுடன் வருபவர்களை உடனடியாக சோதனை செய்கிறோம். 14 நாட்கள் ஒரு நோயாளியை வைத்து அவரை கண்காணித்து வருவது. எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், 2 அவசியமான சோதனைகள் நடத்தி அதில் நெகட்டிவ் வந்தால்தான் வெளியே அனுப்புகிறோம்.
சிகிச்சையைப் பொருத்தவரை 19 வல்லுனர்களை வைத்து தனி வழிகாட்டுதல்களை வகுத்துள்ளோம். அது தினம் தினம் மாறுகிறது. உலக அளவில் உள்ள நாடுகளில் உள்ள நிலைகளை ஆராய்ந்து அதற்கான முறையில் சிகிச்சை முறை வகுக்கப்பட்டு அளிக்கப்படுகிறது. இறப்புகளை நாங்கள் தீவிரமாக ஆய்வு செய்கிறோம். அதை முழுமையாக ஆய்வு செய்ய குழு அமைத்துள்ளோம்.
ஏற்கெனவே சிகிச்சையில் இருந்து குணமானவர் ரத்தத்தைப் பெற்று அதன் பிளாஸ்மாவை நோயுள்ளவர்கள் உடலில் செலுத்தி ஆய்வு செய்ய அனுமதி கோரியுள்ளோம். 2 அனுமதியில் 1 கிடைத்துள்ளது. விரைவில் முழு அனுமதி கிடைத்தவுடன் ஆய்வை தொடங்கிவிடுவோம்.
பிசிஆர் கிட் 1.35 லட்சத்துக்கு ஆர்டர் கொடுத்ததில் 1 லட்சம் வந்தது.மத்திய அரசு 20 ஆயிரமும் டாடா நிறுவனம் 40 ஆயிரமும் பிசிஆர் கிட் கொடுத்துள்ளன. மொத்தம் 1.95 லட்சம் பிசிஆர் கிட் உள்ளது. தானாக ஆர்.என்.ஏவை பிரித்தெடுக்கும் ஆய்வகம் 2 செயல்படுகிறது. மேலும் 2 செயல்பாட்டுக்கு வரும்”.
இவ்வாறு அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
19 hours ago