3 மாதங்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கக் கூடாது; ஊழியர் சங்கம் கோரிக்கை

By ந.முருகவேல்

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களுக்கு சிவப்பு வண்ண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சுங்கச்சாவடிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நோய் தொற்று அபாயம் உள்ளதாக தமிழக சுங்கச்சாவடி ஊழியர்கள் கூட்டமைப்பின் செயலாளர் கார்ல்மார்க்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று (ஏப்.18) கூறுகையில், சுங்கச்சாவடிகள் ஏப்ரல் 20 முதல் தொடர்ந்து வழக்கம் போல் இயங்கும் என மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதையடுத்து, சுங்கச்சாவடி நிர்வாகங்கள் பணியாளர்களை பணிக்கு வர நிர்ப்பந்தித்துள்ளது.

தமிழகத்தில் 42 சுங்கச்சாவடிகளில் 2 ஆயிரம் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். கரோனா வைரல் தாக்கும் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் காணப்படுவதால் அந்த மாவட்டங்கள் 'ஹாட் ஸ்பாட்' எனும் நோய் தொற்று அபாய அடையாள குறியீட்டுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு எவ்வித பாதுகாப்பு கவசமும் வழங்காமல் பணிக்கு வர நிர்ப்பந்திப்பது நோய் தொற்றுக்கு வழிவகுக்கும்.

மேலும், தமிழகத்தில மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்க அனுமதிப்பது என்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும். எனவே தொழிலாளர்களின் அச்சத்தைப் போக்கவும், நோய் தொற்றை தவிர்க்கவும், பொதுமக்கள் மற்றும் சிறு, குறு தொழில் செய்வோருக்கும் பயனளிக்கும் வகையில் சுங்கச்சாவடிகள் கட்டண வசூலை 3 மாதங்களுக்கு தடை செய்ய வேண்டும். மேலும் சுங்கக் கட்டண வசூல் தொடர்பாக பிறப்பிக்க உத்தரவையும் ரத்து செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்