அத்தியாவசியப் பொருட்களை சரக்கு ரயில்களில் எடுத்துச் செல்ல ‘சேது’ உதவி எண் அறிமுகம்

By என்.சன்னாசி

ஊரடங்கு காலத்தில் அத்தியாவசியப் பொருட்களை சரக்கு ரயில்களில் எடுத்துச் செல்வதற்கு ஏதுவான விவரங்களை அறிய ‘சேது’ என்னும் உதவி எண்ணை தெற்கு ரயில்வே ஏப்., 17 முதல் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, இந்த உதவி எண் சேவையை 3 இளம் இந்திய ரயில்வே போக்குவரத்து சேவை பயிற்சி அதிகாரிகள் நிர்வகிக்கின்றனர்.

இச்சேவையின் மூலம் தமிழகம், கேரளம் எல்லைக்கு உட்பட்ட சரக்கு ரயில்கள் பற்றிய விவரங்கள், குறிப்பிட்ட தேதிகளில் சரக்கு ரயிலில் இட வசதி, ஏற்றிச் செல்லப்படும் பொருட்கள் உட்பட பல்வேறு தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.

இந்த சேவையை பயன்படுத்துவதற்கு 90253 42449 என்ற அலைபேசி எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தேவையான தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.

இந்த சேவை மே மாதம் 3-ஆம், தேதி வரை மட்டுமே செயல்படும் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்