சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வைகை ஆற்றில் 144 தடை உத்தரவை மீறி மணல் கொள்ளை அதிகரித்து வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் 55 கி.மீ.க்கு வைகை ஆறு செல்கிறது. மணல் அள்ள தடை இருந்தபோதும் மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் தொடர்ந்து மணல் கொள்ளை நடந்து வந்தது.
இந்த கடத்தலில் அதிகரிகள் சிலரும் உடந்தையாக இருந்ததால் மணல் கொள்ளையை தடுக்க முடியாதநிலை இருந்தது. இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்றை தடுக்க தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால் தடையும் மீறி இரவு நேரங்களில் மானாமதுரை அருகே கால்பிரவு வைகை ஆற்றில் மணல் கொள்ளை தொடர்ந்து நடந்து வருகிறது. ஜேசிபி இயந்திரம் மூலம் மணலை அள்ளி டிப்பர் லாரிகள் மூலம் கடத்தி வருகின்றனர். இதையடுத்து ஆற்றில் ஆங்காங்கே மெகா பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
இதனால் அப்பகுதியில் உள்ள மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கான குடிநீர் திட்டங்களும் பாதிக்கப்படும்நிலை உள்ளது. மேலும் சிவகங்கை மாவட்டத்தில் 33 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் செல்வதை கண்காணித்து வருகின்றனர்.
இருந்தபோதிலும் மணல் கடத்தல் லாரிகள் மட்டும் சோதனைச்சாவடிகளில் தாராளமாக அனுமதிக்கப்பட்டு வருவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago