மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நேற்று ஒரே நாளில் 7 பேர், ‘கரோனா’ நோயிலிருந்து மீண்டு வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
தமிழகத்தில் இதவரை 1242 பேர் ‘கரோனா’வுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இவரின் மனைவி, 2 மகன்கள் ஏற்கெனவே கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்கள், கடந்த வாரம் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த 7 நோயாளிகள் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
» பொதுமக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்குவது குறித்த வழக்கு: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு
» குடிபோதையில் பாமக நிர்வாகியை தாக்கிய காவல் ஆய்வாளருக்கு முக்கிய பதவி வழங்குவதா? - ராமதாஸ் கண்டனம்
அவரை ‘டீன்’ சங்குமணி, ‘கரோனா’ வார்டு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப்பணியாளர்கள் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.
அதனால், தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் 30 பேர் ‘கரோனா’ நோய்க்கு சிகிச்சைப்பெற்று வருகின்றனர். அவர்கள் அனைவரின் உடல்நிலையும் சீராக உள்ளதால் அவர்களும் குணமடைந்து வீட்டிற்கு திரும்புவார்கள் என்று ‘டீன்’ சங்குமணி நம்பிக்கை தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago