கரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கான எதிர்ப்பு சக்தியை உடலுக்கு வழங்கும் புரதச் சத்து நிறைந்த மீன் உணவுக்கான தேவை தற்போது அதிகம் உள்ளது. இதை உணர்ந்து கட்டுமரம், வல்லங்களில் தினசரி மீன் பிடிப்புக்குச் செல்வோருக்கு சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து மீன்பிடிக்கச் செல்ல அனுமதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை நாற்பதுக்கும் அதிகமான மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு லட்சத்துக்கும் அதிகமான மீனவர்கள் உள்ளனர். குமரி மாவட்ட மீனவர்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலும், கேரளத்திலும் தங்கி மீன்பிடித் தொழில் செய்து வந்தனர். நாடு முழுவதுமான ஊரடங்கு அறிவிப்பில் பலரும் சொந்த ஊருக்குத் திரும்பினர். இப்படியான சூழலில்தான் கட்டுமரம், வல்லத்தில் தினசரி மீன் பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால், குமரி மாவட்டத்தின் இரவிபுத்தன் துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பை மதித்து, அரசே அனுமதித்தாலும் தினசரி மீன்பிடிப்புக்குச் செல்வதில்லை என அவர்களுக்குள் பேசி முடிவு செய்துள்ளனர். தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தைவிட இப்போதைக்கு கரோனா வைரஸை விரட்டுவதுதான் நோக்கம் என்னும் உயர்ந்த நோக்கத்தோடு இம்முடிவை அவர்கள் எடுத்திருக்கிறார்கள்.
கூடவே, மாவட்டத்தின் பிற மீனவ கிராமங்களிலும் இதுகுறித்துத் தொலைபேசி வழியாக தங்கள் சொந்தங்களை அழைத்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago