ரமலான் கால வழிபாடுகளை அவரவர் இல்லங்களிலே மேற்கொள்ள பள்ளி வாசல் ஜமாத்தினருக்கு புதுச்சேரி வக்பு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
வரும் 25-ம் தேதி முதல் இஸ்லாமியர்கள் 30 நாட்கள் கடைப்பிடிக்கப்படும் ரமாலான் நோன்பு தொடங்குகிறது. பகலில் நோன்பு நோற்பதும் இரவில் சிறப்புத் தொழுகையை மேற்கொள்வதும் ரமலான் மாதத்தின் முக்கியமான வழிபாடுகள்.
குர்ஆன் அருளப்பட்ட மாதம் என்பதால், இந்த மாதத்தில் முஸ்லிம்கள் அதிகமாகக் குர்ஆன் ஓதுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். குறைந்தபட்சம் ஒரு தடவையாவது குர்ஆனை ஓதி முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இம்மாதம் முழுவதும் குர்ஆன் ஓதுகின்றனர். முப்பது நாட்கள் இரவில் நடைபெறும் சிறப்புத் தொழுகையில் குர்ஆன் முழுமையாக ஓதி முடிக்கப்படுகிறது.
வரும் 25-ம் தேதி முதல் ரமலான் நோன்பு தொடங்கப்படும் நிலையில், அனைத்து பள்ளி வாசல் ஜமாத்தினருக்கும் புதுச்சேரி அரசு வக்பு வாரியம் கரோனா தடுப்பு நடவடிக்கையாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
» ராமநாதபுரம் அருகே ராமகிருஷ்ண மடம் சார்பில் 1,200 பேருக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் நிவாரண உதவி
அதன்படி, "கரோனா நோய் பரவலைக் கட்டுப்படுத்த வரும் ரமலான் நோன்புக் காலத்தில் பள்ளி வாசல்களில் நோன்புக் கஞ்சி விநியோகம், இப்தார் உள்ளிட்ட எந்தவித சிறப்புத் தொழுகைகளோ நடத்தக்கூடாது. ரமலான் காலத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து வழிபாடுகளையும் அவரவர் இல்லங்களிலேயே மேற்கொள்ள வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
31 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago