சாலையோரங்களில் வசித்தவர்களை மீட்டு அவர்களுக்கு உணவு வழங்கும் மதுரை மாநகராட்சி, தற்போது அவர்களுக்கான அத்தியாவசிய மருத்துவ சிகிச்சை மற்றும் கரோனா அறிகுறி எதுவும் இருக்கிறதா? என பரிசோதிக்கவும் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது.
மதுரை மாநகராட்சி பூங்கா முருகன் கோவில் சஷ்டி மண்டபத்தில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றவர்கள் 105 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காக்கை பாடினியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தங்கியுள்ள 141 நபர்களும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு மாநகராட்சி நேரடியாகவும், தன்னார்வலர்கள் மூலமும் உணவுகள் வழங்கி வருகிறது. தற்போது அவர்களில் சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. அதனால், அவர்களுக்கான அத்தியாவசிய மருத்துவ சேவையையும், அவர்களுக்கு யாருக்காவது ‘கரோனா’ அறிகுறி இருக்கிறதா? எனவும் கண்காணிக்க பூங்கா மாரியம்மன் கோயில் சஷ்டிமண்டப வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாமிற்கு மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
அவர்களில் அறிகுறி இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு ‘கரோனா’ பரிசோதனை நடத்தப்படும் என மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர். இந்த முகாமை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் பார்வையிட்டார்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஹங்கேரி நாட்டில் ஒரு முதியோர் இல்லத்தில்தான் முத்னமுதலில் கரோனா பரவியது. கண்காணிக்கத் தவறியதால் அவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு ‘கரோனா’ தொற்று கண்டறியப்பட்டது.
அதனால், ஆதரவற்றவர்களுக்கு வழக்கமான மருத்துவ சிகிச்சையோடு கரோனா அறிகுறி எதுவும் இருக்கிதா? என்றும் பரிசோதிக்கிறோம், ’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago