மஹிந்த்ரா லாஜிஸ்டிக்ஸின் இலவச அவசரகால வாகன சேவை: சென்னை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் 

By செய்திப்பிரிவு

கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் மஹிந்த்ரா லாஜிஸ்டிக்ஸ், சென்னையில் தனது இலவச அவசரகால கேப் சர்வீஸை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை சென்னை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்தியாவின் மிகப்பெரிய 3 பிஎல் தீர்வுகளை [மூன்றாம் தரப்பு சரக்கு போக்குவரத்து தீர்வுகள்] வழங்கும் மிகப்பெரும் நிறுவனங்களில் முன்னணியில் இருக்கும் மஹிந்த்ரா லாஜிஸ்டிக்ஸ் (எம்எல்எல்) , ஹைதராபாத், புதுடெல்லி மற்றும் கொல்கத்தாவில் அனைவருக்கும் பயனளிக்கும் வகையிலான இலவச சேவையை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியது. இதன் பின்னர் தனது மக்கள் போக்குவரத்து வர்த்தகமான 'அலைட்' [Alyte]சேவையை சென்னையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னையில் கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசரகால கேப் சர்வீஸ்களை வழங்கும் என்று 'அலைட்' அறிவித்திருக்கிறது. தனது பெரும் எண்ணிக்கையிலான வாகனங்களில் இருந்து, இச்சேவைகளுக்கென அர்ப்பணிக்கப்பட்ட வாகனங்களை மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், பிரசவத்தை எதிர்நோக்கியிருக்கும் பெண்கள் உள்ளிட்டவர்கள் தங்களது அத்தியாவசிய சேவைகளைப் பெறுவதற்காக பயன்படுத்தலாம்.

வீட்டிற்கு அத்தியாவசியமான பொருட்களை வாங்கச் செல்வது, மருத்துவப் பரிசோதனைகளுக்கோ அல்லது மருத்துவ ஆலோசனைகளுக்கோ செல்வது, வங்கிக்குச் செல்வது, தபால் நிலையங்களுக்குச் செல்வது, அல்லது வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவ சந்திப்புகளுக்குச் செல்வது என எதுவானாலும், பாதுகாப்பான போக்குவரத்து வாய்ப்பில்லாத மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், பிரசவத்தை எதிர்நோக்கியிருக்கும் பெண்கள் உள்ளிட்டவர்கள் 'அலைட்' வழங்கும் இலவச அவசரகால வாகன சேவையைப் பெறலாம்.

மேலும், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ள மற்றவர்களுக்கும் 'அலைட்' தனது ப்ரத்யேக சேவைகளை வழங்குகிறது. இச்சேவையில் ஆர்வமுள்ள இதர குழுவினர், மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸை அதன் ப்ரத்யேக உதவி அழைப்புக்கான எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த சேவை பெருநகர சென்னை மாநகராட்சியின் உடனான நெருக்கமான ஒத்துழைப்புடன், சென்னை நகர எல்லைக்குள் 24x7 இயக்கப்பட்டு வருகிறது. 91-95000 67082 என்ற எண்ணிற்கு அழைப்பதன் மூலம், சென்னையில் இந்த இலவச கேப் சர்வீஸ் சேவையைப் பெறலாம்.

இதுகுறித்து மஹிந்த்ரா லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ராம்ப்ரவீன் சுவாமிநாதன் கூறுகையில், "நமது சமுதாயத்திற்கு இந்தக் காலகட்டமானது முற்றிலும் எதிர்பாராத, மிகவும் கடினமான ஒன்றாகி இருக்கிறது. எனவே வைரஸ் தொற்றினால் உண்டாகியிருக்கும் இந்த நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்கு, அனைத்துத் தரப்பினரிடமிருந்தும், பங்குதாரர்களிடமிருந்தும் ஒருங்கிணைந்த முயற்சி தேவைப்படுகிறது. இதை எதிர்த்துப் போராடுவதில் நம்முடைய அரசாங்கம் பாராட்டத்தக்க நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆதரவோடு, சாத்தியமான அனைத்து வழிகளிலும், எங்களது இந்த முயற்சிகளின் மூலம் நாங்கள் தொடர்ந்து ஆதரவளிக்க விரும்புகிறோம். இந்தக் காலகட்டத்தில், அவசரத் தேவைகளின்போது மக்கள் போக்குவரத்து தொடர்பாக சிரமப்படுவதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். எங்களது இந்த சேவையில் சுகாதாரம், கிருமி நீக்கம் செய்யும் சுத்திகரிப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான எங்கள் எல்லா தரங்களையும் பூர்த்தி செய்யும் எங்களது வரையறுக்கப்பட்ட தீர்வுகளுடனான வாகன சேவைகளை வழங்குகிறோம்.. மக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டுமென்பதையும், அவசியம் இருக்கும் போது மட்டுமே வெளியே செல்லவேண்டுமென்பதையும் நாங்கள் ஊக்குவித்து வருகிறோம்'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்