அம்பேத்கர் காண விரும்பிய இலக்கை அடைய உறுதியேற்போம்: ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

அம்பேத்கர் காண விரும்பிய இலக்கை அவர் பாதையில் அடைய உறுதியேற்போம் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.14), அம்பேத்கரின் 129 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில், அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு மாலையணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, திமுக பொருளாளர் துரைமுருகனும் உடனிருந்தார்.

இதனிடையே, அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் தன் முகநூல் பக்கத்தில், "சமத்துவம் என்ற உணர்வையும், தத்துவத்தையும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்திய அம்பேத்கரின் 129 ஆவது ஆண்டு பிறந்த நாளில் அவரது கொள்கைகளை, இலக்குகளை நினைவுகூர்வோம்.

அறிவையும், கல்வியையும் ஆயுதமாக்கி முன்னேற வழிகாட்டிய மாமேதை. சமத்துவம், ஜனநாயகம் இரண்டையும் தமது கண்களாகப் போற்றியவர். அவர் காண விரும்பிய இலக்கை அவர் பாதையில் அடைய உறுதியேற்போம்" என ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்