தூத்துக்குடியில் மேலும் 2 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படடுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸால் ஏற்கெனவே 24 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் ஒரு மூதாட்டி இறந்தார். மீதமுள்ளவர்களில் 18 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலும், 5 பேர் நெல்லை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் விவரம் சேகரிக்கப்பட்டு, அவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.
அவர்களது சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அதில் சிலரின் பரிசோதனை முடிவுகள் நேற்று வந்தன.
அதில் தூத்துக்குடி போல்டன்புரத்தை சேர்ந்த மேலும் 2 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் கரோனா தொற்று ஏற்பட்டு இறந்த மூதாட்டியுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆவர். இவர்களையும் சேர்த்து தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago