புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு மேலும் ஏப் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதனிடையே ‘‘கரோனா தொற்றிலிருந்து புதுச்சேரி மக்களின் உயிர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறோம்.
புதுச்சேரி மாநில மக்களின் உயிர்தான் முக்கியம். எனவே, புதுச்சேரி மாநிலத்தில் கரோனா பரவாமல் தடுப்பதற்கான கடுமையான நடவடிக்கைகளை அரசு எடுக்கும். புதுச்சேரி மாநில மக்கள் அதனை ஏற்க வேண்டும். தேவைப்பட்டால் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
» நிவாரணப் பொருட்களை நேரடியாக வழங்கத் தடை; வடலூர் தருமசாலைக்கும் அரசின் உத்தரவு பொருந்துமா?
» மேலும் 98 பேருக்கு கரோனா தொற்று: பாதிப்பு எண்ணிக்கை 1,173 ஆனது
பிரதமருடன் முதல்வர்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்திலும் ஊரடங்கை நீட்டிக்கக் முதல்வர் கோரிக்கை வைத்தார். பல மாநிலங்கள் ஏற்கெனவே ஊரடங்கு சட்டத்தை நீட்டித்துள்ளனர். எனவே, புதுச்சேரி மாநிலம் தனித்திருக்க முடியாது. ஊரடங்கு உத்தரவை பொறுத்தவரை அனைத்து மாநிலங்களும் ஒருங்கிணைந்து முடிவெடுக்க வேண்டும்.
தனித்தனியாக முடிவெடுத்தால் குழப்பங்கள் ஏற்படும். ஊரடங்கு தொடர்பாக மத்திய அரிசின் வழிமுறைகள் கொடுக்கும் என நினைக்கிறோம். அதன் பிறகு புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கை நீடிப்பது தொடர்பாக முடிவுகளை அறிவிப்போம்’’ என்று ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு நாளையுடுன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஊரடங்கு ஏப் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று(ஏப் 13) இரவு செய்தியாளர்களிடம் கூறியதாவது,‘‘புதுச்சேரியில் கரோனா தொற்றால் தற்போது 6 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாளை பிரதமர் உறையாற்றும் நிலையில் ஏற்கெனவே நடைபெற்ற கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிக்க பல்வேறு முதல்வர்கள் கோரிக்கை வைத்தனர். புதுச்சேரியிலும் வருகின்ற ஏப் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கபடுகிறது. அம்பேத்கர் பிறந்த நாள் புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில். தற்போது ஊரடங்கு உத்தரவு உள்ளது.
எனவே நாளை அம்பேத்கர் சிலைக்கு கட்சியைச் சார்ந்தோ, அமைப்பைச் சார்ந்தோ ஒருவர் மாலை அணிவிக்கலாம். கூட்டம் கூடினால் காவல்துறை நடவடிக்கை எடுக்கும்’’இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
30 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago