ஊரடங்கு உத்தரவை மீறி தினமும் வெளியே வருபவர்களுக்கு கட்டுபாடு விதிக்கும் வகையில் கோவில்பட்டி காவல் துணை கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் போலீஸார் மோட்டார் சைக்கிள், கார்களுக்கு பெயின்டால் கோடு வரைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, 24 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் சிவப்பு அடையாள குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் இணைந்து பல்வேறு புதிய யுத்திகளை செயல்படுத்த தொடங்கியுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக கோவில்பட்டி காவல் துணை கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றித்திரிபவர்களை கட்டுப்படுத்தும் விதமாக அவர்களது கார், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களில் மஞ்சள் பெயின்ட்டால் கோடு வரைந்து, அடையாளப் படுத்தும் பணி இன்று தொடங்கியது.
கோவில்பட்டியில் டி.எஸ்.பி. ஜெபராஜ் தலைமையில் போலீஸார் மற்றும் ஊர்க்காவல் படையினர் நேற்று வெளியே வந்த கார்கள், மோட்டார் சைக்கிள்களில் மஞ்சள் கோடு வரைந்தனர்.
மஞ்சள் கோடு வரையப்பட்டு வாகனங்கள் ஒரு வாரத்துக்குள் மீண்டும் சாலையில் மருத்துவம் உள்ளிட்ட அவரச தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும். அதை தவிர்த்து, வேறு காரணங்களுக்காக வந்தால் பறிமுதல் செய்யப்படும்.
அதே போல், அடுத்து வரும் நாட்களில் வெவ்வேறு வண்ண பெயின்ட்களால் வாகனங்களில் கோடு வரையப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago