கரோனோ வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜபாளையத்தை சேர்ந்த 62 வயது நபர் இன்று பூரண குணமடைந்து வீடு திரும்பினார். அவரை மருத்துவக்குழுவினர் கைத்தட்டி ஆரவாரம் செய்து வீட்டிற்கு வழியனுப்பி வைத்தனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த 62 வயது நபர் கடந்த 25ம் தேதி ‘கரோனோ’ வைரஸ் அறிகுறியுடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அதன் பின்னர் கொரோனோ உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 29-தேதி மதுரை அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் தொடர் சிகிச்சைக்குப் பின் அவர் பூரண குணமடைந்தார். மருத்துவுமனையில் இருந்து வீடு திரும்பிய அவரை மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் கைதட்டி வழி அனுப்பி வைத்தனர்.
» விருதுநகர் மாவட்டத்தில் மருத்துவர் உள்பட 6 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி: பொதுமக்கள் அச்சம்
விருதுநகர் மாவட்டத்தில் 11 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் குணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுரையில் ‘கரோனா’ வைரஸ் காய்ச்சலுக்கு முதலில் உயிரிழந்தவர் மனைவி, அவரது 2 மகன்கள் உள்பட 3 பேர் இதுவரை ‘கரோனா’ நோயிலிருந்து மீண்டு வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.
மற்ற 21 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் பலர் உடல் நலம் சீராக உள்ளதால் அவர்களுக்கு இறுதிக்கட்ட ‘கரோனா’ பரிசோதனை செய்து வீட்டிற்கு அனுப்பப்பட உள்ளனர்.
‘கரோனா’ ஒரு புறம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும்நிலையில் அதன் நோயாளிகள் மருத்துவர்கள், செவியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் சிகிச்சையால் குணமடைந்து வீட்டிற்கு திரும்புவது பொதுமக்களுக்கு புதுவித நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago