கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழ்நாடு காவலர் குடியிருப்பு கட்டுமான பணிக்காக பிஹார் கட்டுமான தொழிலாளர்கள் 70 பேர் தங்கி கட்டுமான பணியினை செய்து வந்தனர்.
இந்த நிலையில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக கட்டுமான பணிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டது. சிதம்பரத்தில் தமிழ்நாடு காவலர் குடியிருப்பு கட்டுமான பணிகளும் நிறுத்தப்பட்டது.
இப்பணிகளில் வேலை செய்த 70 பிஹார் தொழிலாளர்கள் கடைகள் மூடப்பட்டதால் உணவின்றி தவித்து வந்தனர். இதனை அறிந்த சிதம்பரம் மகாவீர் ஜெயின் சங்கத்தினர் அவர்களுக்கு உணவளித்து கரோனா தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
சட்டப்பேரவை உறுப்பினர் பாண்டியன் கலந்து கொண்டு உணவு வழங்கினார்.
நகராட்சி ஆணையாளர் சுரேந்திர ஷா, டிஎஸ்பி கார்த்திகேயன்,ஜெயின் சங்க தலைவர் லலித்குமார், செயலாளர் கமல்கிஷோர் போத்ரா, பொருளாளர் அஜித் ராஜ், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த சங்கத்தினர் அவர்களுக்கு 3 வேளையும் தொடர்ந்து உணவளித்து வருகின்றனர்.
» அமைச்சர் விஜயபாஸ்கரை ஒதுக்காமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்- விராலிமலை வாக்காளரின் பகிங்கிர கடிதம்
» கரோனா; கள்ளக்குறிச்சியில் நடமாடும் பரிசோதனை மையம்: மாநிலத்திலேயே முதன்முறையாக அறிமுகம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
30 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago