சிவகங்கை மாவட்டம் திருப்பு வனம் அருகே கீழடி பள்ளிச்சந்தை புதூரில், மத்திய தொல்பொருள் துறையினர் நடத்திய அகழ்வாராய்ச் சியில் சங்ககால மக்கள் குடிநீர் தேவைக்காகப் பயன்படுத்திய சுடுமண் உறைகிணறுகள் புதையுண் டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பெங்களூருவில் உள்ள மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் அகழ்வாராய்வுப் பிரிவு சார்பில், கீழடி பள்ளிச்சந்தைபுதூரில் கடந்த மார்ச் மாதம் முதல் அகழ்வாராய்ச்சி நடந்து வருகிறது.
மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராம கிருஷ்ணன் தலைமையில் உதவி தொல்லியலாளர்கள் வீரராகவன், ராஜேஷ் ஆகியோர் அகழ்வாராய்ச் சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த அகழ்வாராய்ச்சி மூலம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மையான நகரம், அந்த இடத்தில் புதையுண்டிருப்பது தெரியவந்தது. மேலும், தமிழரின் தொன்மை நகர நாகரிகத்துக் கான தடயங்களும், சான்றுகளும் பெருமளவில் கிடைத்து வருகின் றன. சில வாரங்களுக்கு முன் உறை கிணறு ஒன்று கண்டறியப்பட்டது.
இதுகுறித்து தொல்லியல் அறி ஞர் வெ.வேதாசலம் கூறியதாவது:
குடிநீர் தேவைக்காகவும், வீட்டின் பிற பயன்பாடுகளுக்காகவும் உறை கிணறு தோண்டும்முறை சங்ககாலம் முதல் அண்மைக்காலம் வரை இருந்து வருகிறது.
வைகை ஆற்றுப் படுகை, கரைகளில் இதுபோன்ற உறை கிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு, திருப்புவனம் பகுதியில் கால்வாய் தோண்டும்போது இதேபோன்ற உறை கிணறுகள் கண்டறியப் பட்டன.
பெரிய குளக்கரைகளிலும், ஆற்றங்கரைகளிலும் உறைகிணறு கள் அமைத்து தண்ணீர் எடுப்பது, தமிழரின் தொன்மையான வழக் கம். இதுபற்றிய சான்றுகள் அகழாய்வில் கிடைத்துள்ளன.
சங்ககால இலக்கியமான பத்துப்பாட்டில் பட்டினப்பாலை என்ற நூலில், பூம்புகார் நகரத் தின் ஒரு பகுதியில் உறைகிணறு கள் இருந்தது பற்றி குறிப் பிடப்பட்டுள்ளது பட்டினப் பாலை நூலாசிரியர் உருத்திரங்கண் ணனார் ‘உறை கிணற்று புறச்சேரி’ எனக் குறிப்பிட்டுள்ளார் அந்த சங்ககாலத்தைச் சேர்ந்த உறை கிணறுதான் கீழடி அகழாய்விலும் கண்டறியப்பட்டுள்ளது.
வெ. வேதாசலம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
34 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
12 hours ago