வாழ்வாதாரம் இழந்த கைவினைக் கலைஞர்கள்- அரசே கொள்முதல் செய்ய வேண்டுகோள்

By என்.சுவாமிநாதன்

கரோனா ஊரடங்கால் ஆயிரக் கணக்கான கைவினைக்கலைஞர்கள் வாழ்வாதாரம்இழந்துள்ளனர்.

தமிழகத்தில் 40 விதமான கைவினைப் பொருட்கள் தயாரிப்பில் 15 லட்சம் கைவினை ஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களால் ஜிஎஸ்டி மூலம் அரசுக்கு 8 முதல் 18 சதவீதம் வரை வரி வருவாயும் கிடைக்கிறது. ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கைவினைப் பொருட்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகின்றன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 30 விதமான கைவினைப் பொருட்கள் தயாரிப்பில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றன. இங்கு மட்டும் ஆண்டுக்கு ரூ.12 கோடி மதிப்பிலான கைவினைப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

கற்சிற்பம், மரச்சிற்பம், பித்தளை வார்ப்பு, கற்றாழை நார், பனை நார் கொண்ட பெட்டிகள், கடல் சிப்பிகள் உட்பட பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நம்பியே, இந்திய கைவினைப் பொருள் சந்தை இருக்கிறது. ஊரடங்கால் கைவினைப்பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளன.

இதுகுறித்து கைவினைக் கலைஞர் ஜெயகுரூஸ் இந்து தமிழ் திசையிடம் கூறியதாவது:

கரோனா ஒழிப்பு விளக்கு ஏற்றும் நிகழ்வில், பிரதமரே நமது கலாச்சாரத்தை பறைசாற்றும் விதமாக நாச்சியார் கோயில் விளக்கில்தான் விளக்கேற்றினார். அந்த அளவுக்கு கைவினைப் பொருட்கள் தேசத்தின் பெரு மிதமாக இருக்கிறது.

ஊரடங்கால் எங்கள் வாழ்வா தாரம் கேள்விக் குறியாகி உள்ளது. அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

இதற்குமுன்பு பேரிடர் காலங் களில் மாநில அரசு கைவினைக் கலைஞர்களிடம் பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்தது. அதுபோல, இப்போதும் செய்தால் எங்கள் வாழ்வாதாரம் காக்கப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்