குமரியில் முதியவர்களுக்கு மருந்துகளை வாங்கி நேரடியாக வீடுகளில் வழங்கும் சேவை; தீயணைப்புத்துறை ஏற்பாடு

By எல்.மோகன்

குமரியில் ஊரடங்கால் வெளியே வரமுடியாத முதியவர்களுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகளை வாங்கி நேரடியாக வீடுகளுக்கே சென்று தீயணைப்புத்துறையினர் வழங்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 55 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தங்களுக்குத் தேவையான மருந்து மாத்திரைகளை மருந்தகங்களில் சென்று வாங்குவதற்கு சிரமம் அடைந்து வருகின்றனர்.

இவர்களுக்கு உதவும் வகையில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் குமரி மாவட்டத்தில் மருந்துகள் வாங்கி நேரடியாக வீடுகளுக்கே சென்று வழங்கும் புதிய சேவை தொடங்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் மூத்த குடிமக்கள், முதியோர்கள், மற்றும் நோயாளிகள் 9345391508 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும், 04652 277101 தேவைப்படும் மருந்து விவரங்களை தெரிவிக்கலாம்.

தீயணைப்பு துறையினர் மருந்தகங்களில் வாங்கிய மருந்துகளை ரசீதுடன் வயதானவர்களின் வீடுகளில் நேரடியாக கொடுத்து பணத்தை பெறுவர். வங்கி கணக்கு மூலமாகவும் பணம் செலுத்தலாம்.

இதுகுறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் துரை கூறுகையில்; முதியோர்களுக்கு தேவைப்படும் மருந்துகள் தினமும் மாலை 4 மணிக்கு மேல் நேரடியாக வீடுகளுக்கு சென்று வழங்கப்படும்.

இது இலவச சேவையாகும். மருந்து பொருட்களுக்கான பணம் மட்டும் வழங்கினால் போதும். இந்த சேவையை வயதானவர்கள், மற்றும் நோயாளிகள் பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

இதைப்போல் மருத்துவமனை, மற்றும் பொது இடங்களில் கிருமி நாசினி தெளிப்பதற்கு கவச உடைகள், மற்றும் கிருமி நாசினி டேங்குகளுடன் தயார் நிலையில் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்