கரோனா தடுப்பில் கார்த்தி சிதம்பரத்தின் ஆலோசனை தேவை இல்லை: ஹெச்.ராஜா பேட்டி

By இ.ஜெகநாதன்

‘‘கரோனா வைரஸ் தொற்று தடுப்பு தடுப்பு நடவடிக்கைகளில் கார்த்தி சிதம்பரத்தின் ஆலோசனை தேவை இல்லை,’’ என பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கூறினார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட நரிக்குறவர்களுக்கு பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா உணவு பொட்டலங்களை வழங்கினார்.

பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட 4 கோடி ஏழைகளுக்கு உணவுப் பொட்டலங்களை தினந்தோறும் வழங்கி வருகிறோம். பாஜக எதிர்க்கட்சியாக உள்ள மாநிலங்களில் உணவு சமைத்து கொடுக்க பல கட்டுப்பாடுகள், சங்கடங்கள் உள்ளன. இதனால் அந்த மாநிலங்களில் மளிகைப் பொருட்களை வழங்கி வருகிறோம்.

ஊரடங்கு உத்தரவு கொண்டு வரவில்லை என்றால் கரோனாவால் 8.30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருப்பவர். அரசு சரியான காலத்தில் சரியான நடவடிக்கை எடுத்ததால் பாதிப்பு குறைவாக உள்ளது.

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் அந்தக் காலத்திற்கும் நிவாரணத் தொகை அளிக்கப்படும். கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் கார்த்தி சிதம்பரத்தின் ஆலோசனை தேவை இல்லை, என்றும் தெரிவித்தார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்